குரோதி வருட தீபாவளி வாரத்திற்கான முழு ராசிபலன்: அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை...

Diwali Week Rasipalan : அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 26, 2024, 07:15 PM IST
  • மேஷத்திற்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு
  • உடல்நல பிரச்சனைகளால் மீனத்திற்கு தொல்லை
  • கடகத்துக்கு வியாபாரம் விரிவடையும் வாய்ப்பு
குரோதி வருட தீபாவளி வாரத்திற்கான முழு ராசிபலன்: அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை... title=

இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் மாதத்தின் கடைசி நாளில் வருகிறது. தீபாவளி வரும் வாரத்தின் திங்கட்கிழமை அக்டோபர் 28 தந்தேரஸ் முதல் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. அன்று முதல் நவம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை வரையிலான ஏழு நாட்களுக்கான ராசிபலன்கள் இவை...

மேஷம் 

மேஷ ராசிக்காரர்களுக்கு புதிய அனுபவம் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாரம் என்றாலும், பணம் வரவு செலவில் கவனமாக இருக்கவும்.

ரிஷபம் 

சக ஊழியர்களால் மனவேதனை அதிகரிக்கும். கடன் நெருக்கடிகளில் இருந்து வெளிவரலாம். பூர்வீக சொத்துக்களால் லாபம், பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும், தீபாவளி நிம்மதியாக கழியும்.

மிதுனம் 

உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. மிதுன ராசிக்காரர்களுக்கு தீபாவளி குதூகலமாக இருக்கும். குடும்பத்திலும், உடன்பிறந்தவர்களிடமும் அனுசரித்துச் செல்வது நல்லது. மனம் சார்ந்த விஷயங்கள் கவலையைக் கொடுக்கும்.

கடகம்
அரசு தொடர்பான வேலைகளில் அனுகூலம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. உறவினர்களுடன் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்வியில் மேன்மை அடையலாம் 

சிம்மம்
புதிய முயற்சியால் வேலை செய்யும் பாணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். சுபகாரிய எண்ணங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும், குடும்பத்தினர் அன்பாக இருப்பார்கள். 

மேலும் படிக்க | இன்னும் 2 நாட்களில் சுக்கிரன் உச்ச பெயர்ச்சி: பணம், பொற்காலம், ராஜராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு

கன்னி
நண்பர்களுடன் இனிமையாக பொழுதைக் கழிக்கலாம். புதிய இலக்குகள் கைவசமாகும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். செலவுகளால் மனதில் விரக்தியான சூழல் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் நெருக்கடியை சமாளிக்க உதவும்.

துலாம்
பொறுமை மிகவும் அவசியம். வேலைகளில் இருந்துவந்த தடைகள் இந்த வாரம் விலகும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். இனம்புரியாத சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். 

விருச்சிகம் 
வியாபாரத்தில் போட்டிகள் குறையும். குடும்பத்தினரிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாரம் இது.

தனுசு
புதுவிதமான சூழலில் வேலை செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பாக அமையும். வெளி வட்டாரங்களில் செல்வாக்குள்ளவர்களின் தொடர்பு ஏற்படும்.

மேலும் படிக்க | தந்தேரஸ் பண்டிகையில் உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம்! தீபாவளியை குஷியாக கொண்டாடும் ராசிகள்!

மகரம்
உயர் பொறுப்பில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்லவும். அவசியமான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். 

கும்பம் 
புதிய பொறுப்புகள் வந்து சேரும். குடும்பம் சார்ந்த பிரச்சனைகள் விலகும். வாக்குறுதி அளிப்பதில் சிந்தித்துச் செயல்படவும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். திடீர் பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும்

மீனம் 
வியாபாரத்தில் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். திடீர் லாபம் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | துர்மரணத்தைத் தவிர்க்க எமனுக்கு மாவிளக்கு! தந்தேரஸ் நாளில் எம தீபம் ஏற்றினால் மரணபயம் இல்லை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News