‘கணேசனை நினை..’ விநாயகரை வழிபடுவதால் ‘இந்த’ 8 பலன்கள் கிடைக்கும்..!

Vinayagar Chaturthi 2023: விநாயகர் சதுர்த்தி வருவதையொட்டி, கணேசனை வணங்கனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாமா…? 

Written by - Yuvashree | Last Updated : Sep 17, 2023, 07:28 AM IST
  • நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.
  • விநாயகர் முழு முதற்கடவுளாக பார்க்கப்படுகிறார்.
  • கணபதியை வணங்கினால் என்னென்ன பலன் கிடைக்கும்? முழு விவரம்.
‘கணேசனை நினை..’ விநாயகரை வழிபடுவதால் ‘இந்த’ 8 பலன்கள் கிடைக்கும்..!  title=

தமிழ் கடவுள் என்றும் முழு முதற் கடவுள் என்றும் போற்றப்படுபவர், விநாயகர். இந்திய அளவில் பலரால் வணங்கப்படும் கடவுளான விநாயகர், தடைகளை நீங்கி அருள் புரிபவராக நம்பப்படுகிறார். இவருக்கு ஆனை முகத்தனை, கணபதி, பிள்ளையார் என பல பெயர்களால் அறியப்படுகிறார். எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் முதல் முதலில் வணங்கப்படும் கடவுள் இவர். நாளை (செப்டம்பர் 18) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விநாயகரை வணங்குவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாமா..? 

1.வளம்:

நம்மில் பலருக்கு நமது வாழ்வு வளமையும் செழிப்பும் மிகுந்ததாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஆசைப்படுவோர், கண்டிப்பாக விநாயக பெருமானை தினமும் வணங்க வேண்டும், அப்படி செய்தால் நம் வாழ்க்கை வெற்றிப்பாதையை நோக்கி பயணிக்கும் என கூறப்படுகிறது. செய்து முடிக்க வேண்டும் என்று எண்ணும் காரியங்களை செவ்வனே செய்ய, விநாயகர் கண்டிப்பாக துணை நிற்பார். 

2.அதிர்ஷ்டம் கொட்டும்:

தன்னை வணங்குவோருக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் கடவுள்களுள் ஒருவராம், விநாயகர். இவரது பெயரை துதிப்பவர்கள் கண்டிப்பாக வாழ்வில் அதிர்ஷ்டம் பெற்று செல்வ செழிப்புடன் இருப்பர் என நம்பப்படுகிறது. கணபதி, கை கூப்பி தன்னிடம் வேண்டுபவர்களை கை நழுவ விடமாட்டார் என்றும் இவரது பக்தர்கள் இடையே ஒரு கருத்து நிலவுகிறாது. விநாயகரை வணங்கினால், வாழ்க்கை மேடு பள்ளங்கள் இன்றி மிதமான பாதையில் பயணிக்குமாம். செல்வம் மற்றும் சக்தி கிடைக்க விநாயகரை வழிபடலாம். 

3.ஞானம்:

விநாயகரின் யானை முகம், ஞானத்தை குறிக்கிறது. நீங்கள் விநாயகரை வணங்குபவராக இருந்தால், கண்டிப்பாக ஞானத்தை அடைவீர்கள். 

மேலும் படிக்க | விநாயக சதுர்த்தி 2023: தேதி மற்றும் உகந்த நேரம்? விரதமுறைகள் முழு விவரம்

4.தடைள் நீங்கும்:

மனதில் முழு நம்பிக்கையுடன் விநாயகரை வணங்கினால் அவர் உங்களை சரியான பாதைக்கு அழைத்து செல்வார் என கூறப்படுகிறது. வாழ்வில் ஏற்படும் பயங்கள், தோல்விகள் மற்றும் தடைகள் என அனைத்தையும் எதிர்கொள்ள விநாயகர் மன உறுதியையும் தைரியத்தையும் அளிப்பார் என நம்பப்படுகிறது. 

5.பொறுமை:

விநாயகரின் பெரிய காதுகள், ‘அனைத்தையும் பொறுமையாக கேட்பவர்’ என்ற அர்த்தத்துடன் பொறுமையை குறிக்கிறது. கணபதியை வணங்கினால், உங்களுக்குள் இருக்கும் வலிமையை தட்டியெழுப்ப உதவும். மேலும், வாழ்வில் பொறுமையை கடைப்பிடித்து மேன்மைக்கு வரவும், ஆனை முகத்தனை வணங்கலாம். 

6.அறிவாளியாக மாறுவீர்கள்:

விநாயகரை வணங்கினால் உங்கள் வாழ்க்கை பாதையில் கண்கூடாக மாற்றத்தை காணலாம் என பெரியோர்களால் கூறப்படுகிறது. நீங்கள் அடைய வேண்டும் என்று நினைக்கும் விஷயங்களை விநாயகரை வணங்கி விட்டு செய்தால், அதை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கான மன உறுதி கிடைக்கும். இது, நீங்கள் அறிவுப்பாதையை எட்டவும் உதவும். 

7.உள்ளம் தூய்மையடையும்:

எந்த சந்தேகமும் இன்றி, விநாயகரை வணங்குபவர்கள், தூய்மையான உள்ளத்தை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. மனதில் எழும் குழப்பங்கள், சந்தேகங்கள், தாழ்வு மனப்பான்மை என பல உள்ளம் சார்ந்த பிரச்சனைகளை கலைய விநாயகரை வழிபடலாம். இவரை துதித்தால், மனதில் ஏற்படும் கெட்ட எண்ணங்களை கலைந்து நற்பாதையை நோக்கி முன்னேறுவீர்கள். 

8.அமைதியான வாழ்க்கை:

விநாயகரை வழிபடுதல் உங்களின் தொழில் முறை வாழ்க்கையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் மேன்மை படுத்த உதவுகிறது. தன் பக்தர்களின் தடைகளை நீக்கும் விநாயகர், அவர்களின் வாழ்வையையும் அமைதி நிறைந்ததாக மாற்றுகிறார். 

மேலும் படிக்க | பிள்ளையார் சுழி போட்டால் வெற்றி நிச்சயமா..? ‘உ’ எழுத்திற்குள் இருக்கும் ஆன்மிக அர்த்தம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News