தமிழ் மாதங்களில் பல மகத்துவங்களை தன்னகத்தே கொண்ட மார்கழி மாதம் இன்று முதல் தொடங்குகிறது. மார்கழி மாதமே கடவுள் வழிபாட்டுக்கான மாதமாக கருதப்படுகின்றது. இந்த மாதத்தில் நாம் செய்யும் பிரார்த்தனைகளை பெருமாள் அப்படியே நடத்தி வைப்பார் என்பது ஐதீகம். மாதங்களில் நான் மார்கழி மாதமாக இருக்கிறேன் என்று சொன்ன கண்ணனுக்கு உகந்த மாதமாக மார்கழி மாதம் கருதப்படுகின்றது.
மார்கழி மாதம் பல ஆன்மீக சிறப்பம்சங்களக் கொண்டுள்ளது. வைணவ வழிபாடு மட்டுமல்லாமல், இந்த மாதத்தில் சைவ வழிபாடும் சிறப்பாக செய்யப்படுகின்றது. மார்கழி என்றாலே நம் அனைவருக்கும் தோன்றுவது திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி ஆகியவைதான். இந்த மாதம் முழுவதும் இறைவனையும், இயற்கையையும் வணங்கும் மாதமாக கூறப்படுகின்றது. தேவர்களுக்கு உகந்த மாதமாக கருதப்படுவது மார்கழி மாதம். இந்த மாதத்தில் ஆலயம் சென்று வழிபட்டால் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மார்கழி முதன் நாளான இன்று பல கோயில்களில் பல சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தூத்துக்குடியில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை 3:30 மணிக்கு சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவில் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருவெம்பாவை திருப்பாவை பாடலை பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் படிக்க | சூரியன் பெயர்ச்சியால் வந்தாச்சு ராஜயோகம்! இனி நல்லகாலம் மட்டும்தான்
இன்று தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு சங்கர் ராமேஸ்வரர் திருக்கோயிலில் அதிகாலை 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமி விஸ்வரூப தரிசனத்தில் காட்சியளித்தார். பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது பின்னர்4 மணிக்கு திருவனந்தலும் 5-15மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும் காலை 8 மணிக்கு கால சந்ததியும் 10 மணிக்கு உச்சகால பூஜையும் நடைபெறுகிறது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதை போன்று தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் கோயிலிலும் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் திருவெம்பாவை திருப்பாவை பாடல்களை பாடி சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நகரமான காஞ்சி மாநகரில் 62 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் மார்கழி மாத பாரம்பரிய பக்திச் சேவை இன்று தொடங்கியது. 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடி பக்தியுடன் வீதி உலா வந்து கச்சபேஸ்வரரை தரிசித்து வழிபாடு செய்தனர்.
மார்கழி மாதத்தில் அதிகாலை ஐந்து மணிக்கு துவங்கும் இந்த மாணவ மாணவிளர்களின் பக்தி பாசுரத்துடன் கூடிய இப்பயணம் அவர்கள் வசிக்கும் பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக செல்கின்றது.பக்திமணத்துடன் செல்லும் திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சிப் பயணம் மேற்கொள்ளும் இந்த இளம் அடியார்கள் காஞ்சிபுரம் பிரசித்திப்பெற்ற அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் வரை சென்று சாமி தரிசனம் மேற்கொண்டு மீண்டும் அதே வழியில் பக்தி பாசுரங்கள் பாடியபடி தங்கள் இல்லங்கள் திரும்புகின்றனர். கடந்த 62 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
மேலும் காஞ்சிபுரத்தில் இதே போல் பல்வேறு பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மார்கழி மாதத்தையொட்டி திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடி வலம் சென்று பல்வேறு கோவில்களில் இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க | டிசம்பர் 19 முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்: 3 சுப யோகங்களால் மகிழ்ச்சி மழை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ