ஐப்பசி மாத தேய்பிறையில் அஹோய் அஷ்டமி! காலாஷ்டமியில் காலபைரவர் வழிபாடு!

Kalashtami October 2024 : ஐப்பசி மாதத்தில் வரும் அஷ்டமி விரதம் அக்டோபர் 24 அன்று அனுசரிக்கப்படும், இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 24, 2024, 12:50 PM IST
  • ஐப்பசி மாதத்தில் வரும் அஷ்டமி விரதம்
  • இந்த நாளில் என்ன செய்ய வேண்டும்
  • கால பைரவ வழிபாடு
ஐப்பசி மாத தேய்பிறையில் அஹோய் அஷ்டமி! காலாஷ்டமியில் காலபைரவர் வழிபாடு! title=

 ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி திதியில் காலஷ்டமி விரதம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், குழந்தைகளின் நல்வாழ்வு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்காக அன்னையர் விரதம் அனுசரிப்பார்கள். அஹோய் அஷ்டமி என்றும் அழைக்கப்படும் இந்த விரதம் அக்டோபர் 24 அன்று அனுசரிக்கப்படும், இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்

வழக்கம்போல விரத நாளன்று காலையில் எழுந்து குளித்து, பூஜைகள் செய்த பிறகு, பகல் முழுவதும் உணவு உண்ணாமல் விரதம் இருந்த பிறகு, இரவில் வானில் நிலவு வந்த பிறகு, பிரார்த்தனை செய்தபின் நோன்பை துறக்க வேண்டும். இந்த நாளில் விரதம் அனுஷ்டிக்கும் தாய்மார்கள் குறிப்பாக சில விதிகளை கடைபிடிக்க வேண்டும். இந்த நாளில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்...

வழக்கமாக தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வழிபடுவது வழக்கம். சிலர் இரவில் வழிபடும் மரபையும் பின்பற்றுகின்றனர். கால பைரவரை வழிபடுவதன் மூலம், பக்தர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதுடன், எதிரிகளே இல்லாத நிலையும் உண்டாகும். இன்றைய அஷ்டமியில், அமிர்த சித்தி, சர்வார்த்த சித்தி, குரு புஷ்ய மற்றும் சர்வார்த்த சித்தி யோகமும்உருவாகிறது.

கலாஷ்டமியின் முக்கியத்துவம்
இந்து மத நம்பிக்கைகளின்படி, காலஷ்டமி விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், அனைத்து வகையான கிரக தோஷங்களிலிருந்தும் விடுதலை பெறலாம். மனதில் உள்ள ஆசைகளும் நிறைவேறும். கலாஷ்டமி விரதம் இருப்பது நோய்களிலிருந்து விடுபடவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உதவும். 

மேலும் படிக்க | 2025ஆம் ஆண்டில்... இந்த 5 ராசிக்காரர்கள் தான் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள் - நல்ல காலம் வருது!

அஹோய் அஷ்டமி அன்று தவிர்க்க வேண்டியவை

அஹோய் அஷ்டமி அன்று யாருடனும் சண்டையிடவோ, வாக்குவாதத்தை வளர்த்துக் கொள்ளவோ கூடாது. அதேபோல, அஹோய் அஷ்டமி அன்று ஊசி மற்றும் நூல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அஹோய் அஷ்டமியன்று குழி தோண்டுதல் போன்ற மண் சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்யக்கூடாது.

காலாஷ்டமியில் செய்ய வேண்டியவை
அஹோய் அஷ்டமி அன்று பிறருக்கு உதவி செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
காலாஷ்டமி அன்னதானம் செய்யுங்கள் அல்லது தேவைப்படுபவர்களுக்கு உதவவும்.
கோபூஜை செய்வது, மாட்டிற்கு அகத்தி கீரை போன்ற உணவுகளை கொடுப்பது நல்லது.  

(பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | ஐப்பசி அடைமழை போல 4 ராசிக்காரர்களை பணமழையால் நனைய வைக்கும் சுக்கிரனின் கேட்டை நட்சத்திரப் பெயர்ச்சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News