நட்சத்திரத்தை மாற்றும் சுக்கிரன்.. இந்த ராசிகளுக்கு பணம் குவியும், அதிர்ஷ்டம் பெருகும்

Venus Transit Horoscope: அடுத்த மாதம் ஆகஸ்டில் சுக்கிரன் தனது நட்சத்திரத்தை மாற்றப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்கள் பயனடைவார்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 17, 2024, 04:53 PM IST
  • திருமண வாழ்க்கையில் இருந்து பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்.
  • பொருளாதார அம்சம் சிறப்பாக இருக்கும்.
  • நிதி பிரச்சனைகளில் இருந்து விடுப்படுவீர்கள்.
நட்சத்திரத்தை மாற்றும் சுக்கிரன்.. இந்த ராசிகளுக்கு பணம் குவியும், அதிர்ஷ்டம் பெருகும் title=

Sukra Peyarchi In Leo: ஜோதிடத்தில், சுக்கிரன் மிகவும் சுப கிரகமாக கருதப்படுகிறது. அதனுடன் இந்த கிரகம் செல்வம், ஆடம்பரம், அன்பு, அழகு, போன்றவையின் காரணி ஆவார். நமது ஜாதகத்தில் சுக்கிரன் சுப ஸ்தானத்தில் இருந்தால், நாம் அரசனைப் போல வாழ்க்கையும், அதிர்ஷ்டத்தையும் பெறுவோன். இது தவிர, சுக்கிரனின் நிலையில் ஏற்படும் மாற்றம் 12 ராசிக்காரர்களிலும் மாற்றத்தை கொண்டு வரும். குறிப்பாக காதல், திருமண வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுவார்.

இந்நிலையில் சுக்கிரன் ஆகஸ்ட் 11 ஆம் தேதி பூரம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். மேலும் ஆகஸ்ட் 22 வரை இந்த நட்சத்திரத்தில் தான் பயணிப்பார். சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். பொருளாதார ரீதியாக ஆதாயம் அடைய வைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியை அள்ளித் தருவார். எனவே அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

மேலும் படிக்க | அருள் பாலிக்கும் கடவுளை பணக்காரராக்கும் பக்தர்கள்! இந்தியாவின் பணக்கார கோவில்கள்!

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி சாதகமான பலனைத் தரும். ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு பிறகு இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் சாதகமாக நடக்கும். புதிய வேலை வாய்ப்புகளை பெறலாம். வியாபாரிகள் வியாபாரத்தில் லாபம் அடைவார்கள். அதனுடன் வியாபாரத்தை விரிவுப் படுத்தலாம். வெளியூர் பயண வாய்ப்புகளை பெறலாம். செல்வம் பெருகும். உங்களின் அனைத்து ஆசைகளும் மகிழ்ச்சியுடன் நிறைவேறும். திருமண வாழ்க்கையில் இருந்து பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி மிகவும் சிறப்பான பலனைத் தரும். பணியிடத்தில் உங்களின் வேலையால் த்ருப்தி அடைந்து மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் பெருகும், இதனால் நிதி நிலை முன்னேற்றம் அடையும். பதவி உயர்வு பெறலாம். பொருளாதார அம்சம் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும். அதிர்ஷ்டம் வாய்ப்புகள் பெறலாம்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி சுப பலன்களை தரும். வாழ்க்கையில் நம்பிக்கை அதிகரிக்கும். மரியாதை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சாதகமாக நடக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுப்படுவீர்கள். செல்வ செழிப்பு உண்டாகும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆரோக்கியமும் மேம்படும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்க... விக்னங்களை நீக்கும் விநாயகர் சிலை ஒன்றே போதும்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News