’நல்ல காலம் பிறக்கபோகுது’ ஒரே வாரத்தில் மகிழ்ச்சியில் நனையபோகும் ராசிகள்

புதன் பெயர்ச்சியால் ஒரு சில ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் நல்ல காலம் பிறக்க இருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 21, 2022, 06:21 AM IST
’நல்ல காலம் பிறக்கபோகுது’ ஒரே வாரத்தில் மகிழ்ச்சியில் நனையபோகும் ராசிகள்  title=

ஜோதிடத்தில் இளவரசனாக இருக்கும் புதன் கிரகம், ஒரு நபரின் ஆளுமை, பேச்சு, வேலை , வியாபாரம், கல்வி, அறிவுத் திறன், நிதி நிலை என அனைத்திலும் அதனுடனைய அருள் இருக்கும். இத்தகைய ராஜபலன்களை வைத்திருக்கும் புதன் கிரகம் வரும் அக்டோபர் 26 ஆம் தேதி துலாம் ராசியில் பிரவேசிக்க இருக்கிறது. இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், சில ராசிக்காரர்கள் இதனால், தொழில், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய இருக்கிறார்கள். 

துலாம்:

புதன் கிரகம் துலாம் ராசியில் பிரவேசிக்கும்போது உங்களுக்கு பொன்னான நாட்கள் தொடங்கும். வேலை, வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றியைத் வரும். சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்பு உருவாகும். கல்வித்துறையுடன் தொடர்புடையவர்கள் ஆதாயமடைவார்கள். வேலையில் உங்களின் வரம்பும் செல்வாக்கும் அதிகரிக்கும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும்.இது இவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். 

தனுசு

துலாம் ராசியில் புதன் நுழைவது உங்களுக்கு பொருளாதார ரீதியாக பலன் கிடைக்கும். இந்த நேரத்தில் வருமானம் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். தொழிலில் லாபம் கிடைக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன. காதல் உறவு மகிழ்ச்சியை தரும். எதிர்காலத்தில் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினருடன் உறவு மேம்படும். அதிர்ஷ்டம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனியிலும், சனி பகவானின் அருளைப்பெறும் ‘3’ ராசிகள்! 

கன்னி

உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் புதன் சஞ்சரிக்கப் போகிறார். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். தொழில் துறையில் புதிய உயரங்களை தொடுவீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் வெற்றி பெறுவார்கள். இந்த நேரத்தில் கடனாக கொடுத்து சிக்கிய பணத்தை திரும்பப் பெறலாம். பேச்சுத்திறன் மற்றும் சந்தைப்படுத்தல் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் சிறந்தது. பண வரவு சாதகமாக இருக்கும். 

மகரம்:

புதனின் பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பாக இருக்கும். தீடீர் பண வரவு மகிழ்ச்சியை கூட்டும். அலுவலக வேலை காரணமாக பிஸியாக இருப்பீர்கள். வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கலாம். மகர ராசிக்காரர்கள் நீண்ட பயணம் ஒன்றில் செல்லக்கூடும். இந்த பயணத்தால் அனுகூலமான பலன்கள் உருவாகும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். சொத்து, பூர்வீக வியாபாரம் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News