Guru Peyarchi Palangal: அனைத்து கிரகங்களில் அதிக சுப பலன்களை அளிக்கும் கிரகமாக உள்ளவர் குரு பகவான். செல்வம், கல்வி, திருமண வாழ்க்கை, குழந்தைகள், லாபம், செழுமை, ஆற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக அவர் உள்ளார். ஒருவரது ஜாதகத்தில் குரு நல்ல இடத்தில் இருந்தால், அவர் வாழ்வில் அனைத்து விதமான வெற்றிகளையும் பெறுகிறார்.
அனைத்து கிரகங்களும் ஒரு குறிபிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் உள்ளார். அவர் மே மாதம் மிதுன ராசியின் பெயர்ச்சி ஆகவுள்ளார். அதற்கு முன்னதாக அவரது நிலையில் மாற்றம் இருக்கும். தற்போது வக்ர நிலையில் இருக்கும் குரு, பிப்ரவரி 4 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைவார்.
குரு வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு இந்த காலத்தில் வெற்றிகள் குவியும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்து முடியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம் (Aries)
மேஷ ராசிக்கு குரு வக்ர நிவர்த்தி நல்ல பலன்களை அளிக்கும். இந்த குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு செல்வம், குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் பேச்சாற்றல் ஆகியவற்றை அள்ளித் தரும். பண வரவு அதிகமாகும். அலுவலக பணிகளில் அனைவரது பாராட்டையும் பெறுவீர்கள். படிப்பில் ஆர்வம திகரிக்கும். போட்டித் தெர்வுகளில் வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். பழைய தகராறு தீரும். வருமானம் நன்றாக இருக்கும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், தொழிலில் லாபம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும்.
கன்னி (Virgo)
கன்னி ராசிக்காரர்களுக்கு, குரு வக்ர நிவர்த்தி வெற்றிகரமானதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகளால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். இந்த நேரத்தில் உங்கள் வேலையில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. நிதி ஆதாயம் இருக்கும். வர்த்தகம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
விருச்சிகம் (Scorpio)
விருச்சிக ராசிக்காரர்களுக்கு, குரு வக்ர நிவர்த்தி லாபகரமானதாக இருக்கும். சுபமான நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை செய்பவர்கள் தங்கள் வேலைத் துறையில் முன்னேற்றம் அடைவார்கள். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகமாக இருக்கும். இந்த நேரம் திருமணமாகாதவர்களுக்கு சாதகமாக இருக்கும். திருமணம் நிச்சயம் ஆகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கும்பம் (Aquarius)
கும்ப ராசிக்காரர்களுக்கு குரு வக்ர நிவர்த்தி சாதகமான பலன்களை அளிக்கும். குரு பெயர்ச்சியின் தாக்கம் கும்ப ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகமாகும். தந்தையின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். காதல் வாழ்க்கை சாதகமாக இருக்கும். வணிகத்தில் லாபம் அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 2025 சனி பெயர்ச்சியும்... அஷ்டம சனியும்... சனியில் பிடியில் சிக்கப் போகும் ராசி எது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ