UPSC-ன் அதிகாரபூர்வ வலைதளத்தில் Hacker-கள் செய்த வேடிக்கை!

இந்திய அரசு நிர்வகிக்கும் UPSC-ன் அதிகாரப்பூர்வ வலைதளமானது திங்கள் இரவு Hack செய்யப்பட்டுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 11, 2018, 11:46 AM IST
UPSC-ன் அதிகாரபூர்வ வலைதளத்தில் Hacker-கள் செய்த வேடிக்கை! title=

இந்திய அரசு நிர்வகிக்கும் UPSC-ன் அதிகாரப்பூர்வ வலைதளமானது திங்கள் இரவு Hack செய்யப்பட்டுள்ளது!

UPSC-ன் அதிகாரப்பூர்வ வலைதளமான http://www.upsc.gov.in/ ஆனது நேற்று இரவு Hacker-களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்திய குடிமைப் பணித் தேர்வுகள் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு அதிகாரிகளை தேர்ந்தெடுக்க தேர்வுகள் நடத்தும் UPSC-ன் வலைதள பக்கத்தில் பிரபல கார்ட்டூன் தொடரான டோரேமான் படம் மட்டும் இடம்பெற்று இருந்துள்ளது, இதன் பின்னணியில் இந்தி பாடலும், புகைப்படத்தில் “Doraemon!!!!!!! Pick up the Call” மற்றும் “I. M. STEWPEED” என்னும் இரண்டு வரிகள் மட்டுமே இடம்பெற்று இருந்தது.

UPSC 2018 தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை இணையம் வழியில் பெறுவதற்கான பணி நேற்று தொடங்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினமே வலைதளம் முடக்கப்பட்டுள்ளது சர்ச்சையினை கிளப்பியுள்ளது.

இது விவகாரம் குறித்து பலரும் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.

இன்று காலை UPSC-ன் பக்கம் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியான போதிலும், தற்போது UPSC-ன் வலைதளம் "The Website is Under Maintenance!" என்ற வாசகத்துடன் மட்டுமே காட்சியளிக்கின்றது. 

விரைவில் இணையப்பக்கம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது!

Trending News