திடீரென தாக்கிய இறந்த முதலை, அரண்டு ஓடிய மக்கள்: வைரல் வீடியோ

Animal Attack Video: இறந்துவிட்டதாக நினைத்து முதலையின் அருகில் செல்லும்போது, அது திடீரென எழுந்து தாக்கினால் எப்படி இருக்கும்? இந்த வீடியோவில் காணலாம்!!

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 28, 2023, 11:46 AM IST
  • மிருகங்கள் பொதுவாக பசியுடன் இல்லாத போது தாமாக மனிதர்களையோ பிற மிருகங்களையோ தாக்குவதில்லை.
  • ஆனால், தங்கள் பாதுகாப்புக்கு பிரச்சனை என்றால், அவை தாக்குதலுக்கு தயார் ஆகிவிடும்.
  • மிருகங்களை காரணமின்றி கிண்டல் செய்தாலோ, அல்லது சீண்டினாலோ, அவை கண்டிப்பாக பதிலடி கொடுக்கும்.
திடீரென தாக்கிய இறந்த முதலை, அரண்டு ஓடிய மக்கள்: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

மிருகங்கள் பொதுவாக பசியுடன் இல்லாத போது தாமாக மனிதர்களையோ பிற மிருகங்களையோ தாக்குவதில்லை. ஆனால், தங்கள் பாதுகாப்புக்கு பிரச்சனை என்றால், அவை தாக்குதலுக்கு தயார் ஆகிவிடும். மிருகங்களை காரணமின்றி கிண்டல் செய்தாலோ, அல்லது சீண்டினாலோ, அவை கண்டிப்பாக பதிலடி கொடுக்கும். விலங்குகளை கிண்டல் செய்யும் மனிதர்களுக்கு அவை கற்றுக்கொடுக்கும் பாடத்தை நாம் சமூக ஊடகங்களில் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். 

தற்போது அது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் சில நபர்களையும் ஒரு முதலையையும் காண முடிகின்றது. சிலர் முதலைக்கு அருகில் சிலர் புகைப்படம் எடுப்பதைக் காண்கிறோம். ஆனால் சிறிது நேரம் கழித்து, வீடியோவில் காணப்படும் காட்சி நம்மை அதிர்ச்சியில் துள்ளி குதிக்க வைக்கிறது. 

மேலும் படிக்க | டீச்சரம்மாவின் நாய்னா சும்மாவா? படிச்சு அப்படியே செய்யும் நாயின் வைரல் வீடியோ

திடீரென தாக்கிய முதலை

வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டில் ஒரு இடத்தில் முதலை ஒன்று படுத்திருப்பதைக் காண முடிகின்றது. சிலர் அங்கு வந்து முதலையுடன் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தனர். அச்சமின்றி அவர்கள் போட்டோ எடுப்பதை பார்த்தால், முதலை இறந்துவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், அவர்களில் ஒருவர் முதலையின் முதுகில் கை வைத்தவுடன், முதலை ஆவேசமடைந்து அவர்களைத் தாக்குகிறது. முதலை இறந்த நிலையில் இருப்பதாக எண்ணி அதனுடன் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தவர்களுக்கு இது ஒரு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. அனைவரும் அச்சத்தில் அங்கிருந்து ஓடுகிறார்கள்.

இந்த காட்சியின் வீடியோவை பார்க்கும் நமக்கும் இந்த காட்சி பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது.

முதலை தாக்குதல் வீடியோ வைரலானது, வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Earth Reels (@earth.reel)

வீடியோவை பார்க்கும்போது அந்த கும்பலில் ஒருவரை முதலை பிடித்தது போல் தெரிகிறது. காட்டு விலங்குகள் தொடர்பான இந்த வீடியோ, விலங்குகளுடன் விளையாடுவது எவ்வளவு ஆபத்தானதாகக்கூடும் என்ற செய்தியை நமக்கு அளிக்கிறது. இந்த வீடியோ earth.reel என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இதற்கு இணையவாசிகள் பல விதமான கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

சமீபத்தில் வைரலான மற்றொரு முதலை:

ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர்களின் படகில் முதலை ஒன்று திடீரென்று ஏறி வருவதை சில நாட்களுக்கு முன்னால் வைரலான மற்றொரு வீடியோவில் காண முடிந்தது. இதனால் பயந்து இளைஞர்கள் அதை விரட்ட முயன்றனர். இந்த முயற்சியில் ஒரு இளைஞர் தன் உயிரைப் பணயம் வைத்து முதலையை குத்த முயற்சிக்கிறார். முதலை தன்னுடைய வாயை திறந்து அவரை அச்சுறுத்துகிறது. பின்னர் மற்றொரு இளைஞர் சற்று புத்திசாலித்தனமாக செயல்படுகிறார். முதலையின் வாலை பிடித்து அவர் அதை தண்ணீரில் தள்ள முயற்சிக்கிறார். முதல் முயற்சியில் தோல்வி அடைந்தாலும், அடுத்த முறை அவருக்கு வெற்றி கிடைக்கிறது. முதலையின் வாயில் குத்த முயற்சிக்கும் செயல் விசித்திரமாக உள்ளது. அவரது கையை முதலை தன் வாயால் கவ்வி இருந்தால், அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை நினைக்கவே பீதியாக உள்ளது.

இந்த விசித்திரமான முதலை வீடியோ ட்விட்டரில் @HumanAreMetal என்ற கணக்கில் பகிரப்பட்டது. வீடியோவை இங்கே காணலாம். 

மேலும் படிக்க | மணமகளையே கீழே தள்ளிவிட்டு இப்படி ஒரு விளையாட்டா? வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News