Skin Cancer சிகிச்சையில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் அடைந்த மாபெரும் வெற்றி!!

தோல் புற்றுநோய்க்கான பொதுவான சிகிச்சைகளில், அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவை அடங்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 8, 2020, 04:09 PM IST
  • தோல் புற்றுநோய்க்கு வந்தது ஒரு புதிய சிகிச்சை.
  • காந்த நானோ ஃபைபர்களுடன் Non-invasive bandage-களை IISc ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • இதில் AMF ஐப் பயன்படுத்தி கட்டிகளை வெப்பப்படுத்த காந்த நானோ துகள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
Skin Cancer சிகிச்சையில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் அடைந்த மாபெரும் வெற்றி!! title=

புதுடில்லி: தோல் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க காந்த நானோ ஃபைபர்களுடன் ‘Non-invasive bandage’களை இந்திய அறிவியல் நிறுவனத்தின் (IISc) ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது கட்டி உயிரணுக்களில் (Tumor cells) வெப்பத்தை கட்டுப்படுத்தும். தோல் புற்றுநோய்க்கு முக்கிய காரணம் புற ஊதா கதிர்களை சூரிய வெளிச்சத்தில் அதிகமாக வெளிப்படுத்துவதாகும்.

IISc-ன் படி, முக்கியமாக இரண்டு வகையான தோல் புற்றுநோய்கள் (Skin Cancer) உள்ளன. உயிரணுக்களில் உள்ள மெலனோசைட்டுகளிலிருந்து உருவாகும் ஒரு மெலனோமா, மற்றொன்று, தோல் செல்களிலிருந்து உருவாகும் மற்றொரு மெலனோமா. மெலனோமா அல்லாத தோல் புற்றுநோயால் அதிகமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என IISc கூறியுள்ளது. ஆனால் மெலனோமா அதை விட ஆபத்தானது. இதனால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதாக IISc தெரிவித்துள்ளது.

ALSO READ: Nobel Prize 2020: ஹெபடைட்டிஸ் சி வைரஸை கண்டறிந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

தோல் புற்றுநோய்க்கான பொதுவான சிகிச்சைகளில், அறுவை சிகிச்சை (Surgery), கதிர்வீச்சு சிகிச்சை (radiation therapy) மற்றும் கீமோதெரபி (Chemotherapy) ஆகியவை அடங்கும். ஆனால் இந்த சிகிச்சைகள் மற்றும் பிற பாரம்பரிய சிகிச்சைகள் அவற்றிற்கான வரம்புகளைக் கொண்டுள்ளன.

தோல் புற்றுநோய் சிகிச்சைக்கு ஒரு நம்பிக்கைக்குரிய மாற்று ஹைபர்தர்மியா (Hyperthermia) ஆகும். சமீபத்திய ஆண்டுகளில், புற்றுநோய் செல்களை திறம்பட குறிவைக்கும் வகையில் கட்டி திசுக்களுக்கு வெப்பத்தை கடத்தும் முறைகளை உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அத்தகைய ஒரு நுட்பம் காந்த ஹைபர்தர்மியா (magnetic hyperthermia) என்று அழைக்கப்படுகிறது. இதில் AMF ஐப் பயன்படுத்தி கட்டிகளை வெப்பப்படுத்த காந்த நானோ துகள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இப்போது IISc-ல், Centre for Biosystem Science and Engineering மற்றும் மூலக்கூறு இனப்பெருக்கம், மேம்பாடு மற்றும் மரபியல் துறை ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் எலக்ட்ரோஸ்பின்னிங் (Electrospinning) என்ற முறையை வகுத்துள்ளனர். இதன் மூலம் தயாரிக்கப்பட்ட பேண்டேஜுகளில் இரும்பு ஆக்சைடாலான நானோ துகள்கள், Fe3O4, மற்றும் PCL எனப்படும் பபயோடீக்ரேடபிள் பாலிமர் ஆகியவை ஒரு சர்ஜிகல் டேப்பில் ஒட்டப்பட்டிருக்கும். இதன் மூலம் புற்றுநோயிலிருந்து காத்துக்கொள்வது சாத்தியமாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். 

ALSO READ: COVID-19 நோயாளிகளின் நுரையீரலில் சுரக்கும் திரவ ஜெல் மருந்தாக பயன்படும்! தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News