மாரடைப்பு ஏற்பட அதிக கொலஸ்ட்ரால் முக்கிய காரணமாக, உள்ளது. நரம்புகளில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது, அது இரத்த நாளங்களை மூடுவதால், ரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக இதயம் தொடர்பான நோய்களுக்கு அதிகளவிலான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்வது அவசியமாகிறது.
கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தை தடுப்பதோடு, இதய நோய்கள் எதுவும் அண்டாமல் இருக்கும். இந்நிலையில், எனவே, கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட உணவுகளால் தயாரிக்கப்படும் சில சட்னி வகைகளை அறிந்து கொள்ளலாம்.
தக்காளி சட்னி: தக்காளியில் லைகோபீன் கெட்ட கொழுப்பான எல்டிஎல் கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்டது. கூடுதலாக, தக்காளியில் நார்ச்சத்து மற்றும் நியாசின் அதிக அளவில் உள்ளது. இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
பூண்டு சட்னி: தினமும் 2 பல் அல்லது 3-6 கிராம் பூண்டு சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவை 10% குறைக்கும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. ஏனெனில் பூண்டில் அல்லிசின் கொலஸ்ட்ராலை எரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கொத்தமல்லி சட்னி: கொத்தமல்லியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. எனவே, இரத்த அழுத்தம் மற்றும் எல்டிஎல் (கெட்ட) கொழுப்பைக் குறைத்து, HDL (நல்ல) கொழுப்பை அதிகரிப்பதன் மூலம் உங்கள் இதயத்தைப் பாதுகாக்கிறது.
புதினா சட்னி: புதினா ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சக்தி வாய்ந்த மூலமாகும். ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம், கொழுப்பை கரைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. புதினா உணவுக்கு சுவையை சேர்க்கும் ஒரு சூப்பர் சட்னியாகும்.
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த, வெண்ணெய், நெய், இறைச்சி, பாலாடைக்கட்டி, பால் பொருட்கள், ஐஸ்கிரீம், தேங்காய் எண்ணெய் போன்ற ஆரோக்கியமற்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.