ஐக்கிய அரபு அமீரகத்தில் நுழைவதற்கான நுழைவு அனுமதி மற்றும் விசா வழிமுறையை மாற்றியமைப்பதற்கான முடிவின் ஒரு பகுதியாக, சில புதிய மாற்றங்கள் அடுத்த மாதம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைப்பு முதல் முறை வருபவர்களுக்கு எந்த ஸ்பான்சரும் இல்லாமல், வெவ்வேறு வருகை நோக்கங்களுக்காக பல்வேறு வகையான விசா வகைகளை வழங்குகிறது. இந்த விசாக்கள் அமீரகத்துக்கு வருபவர்களின் தேவைகளையும் வருகையின் நோக்கத்தையும் பூர்த்தி செய்யும் நெகிழ்வான வழிகளை வழங்குகின்றன.
இந்த புதிய நுழைவு பர்மிட்கள், ஐக்கிய அரபு அமீரகத்தை ஒரு கவர்ச்சியான சுற்றுலா தலமாக ஆராய்வதற்காக, வெளிநாட்டவர்களுக்கான பல்வேறு வகையான விசாக்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பை விரிவுபடுத்தும்.
விசிட் விசா:
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்ல, இந்த புதிய விசா வகை, செப்டம்பர் 2022 முதல் வெளிவரும். இந்த விசா முன்பு இருந்த 30 நாட்களுக்கு பதிலாக 60 நாட்கள் வரை தங்க அனுமதிக்கும்.
மல்டி-என்ட்ரி டூரிஸ்ட் விசா:
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுற்றுலா நிறுவனங்களால் வழங்கப்படும் வழக்கமான சுற்றுலா விசாவிற்கு கூடுதலாக, ஐந்து வருட மல்டி-எண்ட்ரி டூரிஸ்ட் விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நுழைவு அனுமதி சுற்றுலாப் பயணிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸை இன்னும் ஆழமாக சுற்றிப்பார்க்க அனுமதிக்கும். இந்த புதிய விசாவிற்கு ஸ்பான்சர் தேவைப்படாது. தேவைகள் என்னவென்றால், விசா விண்ணப்பத்திற்கு 6 மாதங்களுக்கு முன் விண்ணப்பதாரர் $4,000 (அல்லது பிற நாணயத்தில் அதற்கு சமமான தொகை) வங்கி இருப்பு வைத்திருக்க வேண்டும். இதைக் கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பயணிகள் தொடர்ந்து 90 நாட்கள் தங்கலாம். இதில் ஒரே நிபந்தனை என்னவென்றால், பயணிகள் தங்கும் அவதி ஒரு வருடத்தில் தொடர்ந்து 180 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | NRIகளுக்கு சேவை வழங்க 30 நாடுகளுடன் இணைந்துள்ள SBI வங்கி!
வேலை வாய்ப்பு ஆய்வு நுழைவு விசா:
இந்த விசாவிற்கு ஸ்பான்சர் அல்லது ஹோஸ்ட் தேவையில்லை. மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தின்படி முதல் அல்லது இரண்டாவது அல்லது மூன்றாவது திறன் மட்டத்தில் வகைப்படுத்தப்பட்டவர்களுக்கும், உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களில் புதிதாகப் பட்டம் பெற்றவர்களுக்கும் இது வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச கல்வி நிலை இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமானதாக இருக்க வேண்டும்.
வணிக நுழைவு விசா (பிசினஸ் எண்ட்ரி விசா):
இந்த எண்ட்ரி பர்மிட்டுக்கு, ஸ்பான்சர் அல்லது ஹோஸ்ட் தேவையில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில் வணிக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உறவினர்கள் அல்லது நண்பர்களைப் பார்ப்பதற்கான நுழைவு அனுமதி:
தற்போதைய திருத்தத்தின்படி, ஒரு பயணி அவர்/அவள் ஐக்கிய அரபு எமிரேட் குடிமகன் அல்லது குடியிருப்பாளரின் உறவினர் அல்லது நண்பராக இருந்தால், இந்த நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஸ்பான்சர் அல்லது ஹோஸ்ட் தேவையில்லை.
படிப்பு மற்றும் பயிற்சிக்கான நுழைவு அனுமதி:
இந்த அனுமதியானது பயிற்சி மற்றும் படிப்புகளில் கலந்துகொள்பவர்கள் மற்றும்/அல்லது இன்டர்ன்ஷிப் திட்டங்களில் பங்கேற்பவர்களுக்கானது. ஸ்பான்சர், நாடு அல்லது அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் உரிமம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி அல்லது ஆராய்ச்சி நிறுவனங்களாக இருக்கலாம். படிப்பு அல்லது பயிற்சி அல்லது இன்டர்ன்ஷிப் திட்டத்தின் விவரங்களையும் அதன் கால அளவையும் தெளிவுபடுத்தும் கடிதம் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டிருக்க வேண்டும்.
தற்காலிக பணிக்கான நுழைவு அனுமதி:
தகுதிகாண் சோதனை அல்லது திட்ட அடிப்படையிலான பணி போன்ற தற்காலிக பணி நியமனம் உள்ளவர்களுக்கு இந்த அனுமதி உள்ளது. இந்த விசா முதலாளியால் ஸ்பான்சர் செய்யப்படுகிறது. இதற்கு ஒரு தற்காலிக பணி ஒப்பந்தம் அல்லது வருகையின் நோக்கத்தை தெளிவுபடுத்தும் முதலாளியிடமிருந்து ஒரு கடிதம் மற்றும் வேலை செய்வதற்கான ஆரோக்கியம் மற்றும் தகுதிக்கான சான்று தேவை.
மேலும் படிக்க | இந்திய மாணவர்களுக்கு விரைவில் முன்னுரிமை விசா: இங்கிலாந்து தூதரகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ