Public Provident Fund: பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் சேமிப்புத் திட்டமாகும். மக்களிடையே மிக பிரபலமாக உள்ள முதலீட்டுத் திட்டங்களில் பிபிஎஃப் முக்கியமான ஒன்றாக உள்ளது. இது ஒரு நிதியாண்டுக்கு ரூ.1,50,000 வரையிலான முதலீடுகளுக்கு வரி இல்லாத வருமானத்தை வழங்குகிறது. PPF மூலம், 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வரி சலுகைகளை பெற முடியும். PPF -இல் முதலீடு செய்து மாதம் ரூ.1,20,000 வரி இல்லாத வருமானத்தை எவ்வாறு பெறுவது என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.
PPF: முக்கிய அம்சங்கள்
- பொது வருங்கால வைப்பு நிதி என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் திட்டமாகும்.
- இது வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் உத்தரவாதமான வருமானம் மற்றும் வரிச் சலுகைகளை வழங்குகிறது.
- வங்கி அல்லது தபால் நிலையத்தில் PPF கணக்கைத் திறக்கலாம்.
PPF Account: பிபிஎஃப் கணக்கில் முதலீட்டு காலம் என்ன?
ஒரு PPF கணக்கில் முதலீட்டில் 15 ஆண்டுகள் லாக்-இன் காலம் உள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு, கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கை 5 ஆண்டுகளுக்கான பிளாக்குகளில் நீட்டிக்க முடியும்.
PPF இல் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச முதலீட்டுத் தொகை எவ்வளவு?
PPF -இல் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ. 500 ஆகவும், அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Tax Benefits: இதில் கிடைக்கும் வரிச் சலுகைகள் என்ன?
ரூ. 1.5 லட்சம் வரையிலான PPF பங்களிப்புகள் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குகளுக்குத் தகுதியுடையவை. இந்த திட்டத்தில் ஈட்டிய வட்டி மற்றும் கார்பஸுக்கும் வரி விலக்கு அளிக்கப்படும்.
PPF இல் 15 ஆண்டுகள் முதிர்வு காலத்திற்கு முன்பு பணத்தை எடுக்க முடியுமா?
PPF கணக்கு வைத்திருப்பவர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நிதியாண்டில் 1 முறை பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுகிறார்.
முந்தைய ஆண்டின் இறுதியில் எவ்வளவு பணத்தை எடுக்கலாம்?
முந்தைய 4வது ஆண்டின் இறுதியில் அல்லது முந்தைய ஆண்டின் இறுதியில், எது குறைவாக இருக்கிறதோ அந்த நேரத்தில் ஒரு பரிவர்த்தனையில் மொத்த இருப்பில் 50 சதவீதம் வரை நீங்கள் பணத்தை எடுக்கலாம்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு PPF கணக்கை என்ன செய்ய வேண்டும்?
முதிர்வு காலமான 15 ஆண்டுகளுக்குப் பிறகு, வைப்புத்தொகையுடனோ அல்லது அது இல்லாமலோ உங்கள் கணக்கைத் தொடரலாம்.
PPF இலிருந்து ஒரு மாதத்திற்கு ரூ. 1,20,000 பெறுவது எப்படி?
PPF மூலம் மாதம் ரூ.1,20,000 பெற,
- ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும்
- 15 ஆண்டுகளுக்கான முதிர்வு காலம் வரை அதைத் தொடர வேண்டும்
- அதிகபட்ச வட்டியைப் பெற, ஒவ்வொரு நிதியாண்டிலும் ஏப்ரல் 1-5 க்கு இடையில் முதலீடு செய்ய வேண்டும்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு PPF கார்ப்பஸ் என்னவாக இருக்கும்?
15 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகை ரூ.22,50,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.18,18,209 ஆகவும், மதிப்பிடப்பட்ட முதிர்வு ரூ.40,68,209 ஆகவும் இருக்கும். இதன் பின்னர் முதலீட்டாளர் 5 ஆண்டுகள் நீட்டிப்பு எடுத்துக்கொண்டு, முன்பு போலவே வருடத்திற்கு ரூ.1.50 லட்சத்தை முதலீடு செய்யலாம்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு PPF கார்ப்பஸ் என்னவாக இருக்கும்?
20 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ.30,00,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.36,58,288 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.66,58,288 ஆகவும் இருக்கும். இந்த கட்டத்தில், முதலீட்டாளர் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு எடுத்துக்கொண்டு, வருடத்திற்கு ரூ.1.50 லட்சம் முதலீடு செய்யும் நடைமுறையைத் தொடரலாம்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு பிபிஎஃப் கார்ப்பஸ் என்னவாக இருக்கும்?
25 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ.37,50,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.65,58,015 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.1,03,08,015 ஆகவும் இருக்கும்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு பிபிஎஃப் கார்ப்பஸ் என்னவாக இருக்கும்?
30 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ.45,00,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.1,09,50,911 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.1,54,50,911 ஆகவும் இருக்கும்.
34 ஆண்டுகளுக்குப் பிறகு பிபிஎஃப் கார்ப்பஸ் என்னவாக இருக்கும்?
34 ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்த முதலீடு ரூ.51,00,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.1,59,43,144 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.2,10,43,144 ஆகவும் இருக்கும்.
34 ஆண்டுகள் முதலீட்டிற்குப் பிறகு அடுத்து என்ன செய்ய வேண்டும்?
இங்கிருந்து, நீங்கள் முழு கார்பஸுக்கும் வட்டியை எடுக்கத் தொடங்கலாம். நீட்டிப்புகளின் போது, கணக்கு வைத்திருப்பவர் வருடத்திற்கு ஒரு முறை வட்டித் தொகையை எடுக்க அனுமதிக்கப்படுவார்.
உங்கள் வட்டித் தொகை என்னவாக இருக்கும்?
7.1 சதவீத வட்டி விகிதத்தில், ஒரு வருடத்தில் மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.17,53,595 ஆக இருக்கும். இது ஒரு மாதத்திற்கு ரூ.1,24,505 மதிப்பிடப்பட்ட வட்டிக்கு சமம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ