Actress Latha:நடிகை லதாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு தி ரியலிஸ்டிக் 2025 விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் லதாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

 

பல்வேறு துறைகளில் சாதித்து விளங்கிய பெண்களைப் போற்றி, அவர்களின் சாதனைகளை பெருமைப்படுத்தி, தி ரியலிஸ்டிக் 2025 விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டு, பெண்கள் பல துறைகளில் தனது திறமையைச் சுட்டிக் காட்டி, சிரமங்களை கடந்து சாதனைகள் பெற்று முன்னேறியவர்களை அங்கீகாரம் செய்தது. இந்த நிகழ்ச்சி, பெண்களின் பங்களிப்பை பாராட்டி, அவர்களுக்கு உரிய மதிப்பையும் பெருமையும் அளிக்கும் நிகழ்வாக அமைந்தது.

 

1 /7

ஈரோடு கவிதாலயம் சார்பில் நடிகை லதாவுக்கு வாழ் நாள் சதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவர் பிரபல பிண்ணனி பாடகியாக சினிமாவில் இன்றும் உயர்ந்த மதிப்பில் உள்ளார். 

2 /7

பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு தி ரியலிஸ்டிக் 2025 விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.  

3 /7

சஞ்சய் டாங்கி அணில் டாங்கி மற்றும் சிதேஷ் கோத்தாரி ஆகியோரின் முயற்சியின் காரணமாக தொடர்ந்து ஏழாம் ஆண்டாக ரியலிஸ்டிக் 2025 விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.  

4 /7

தி ரியலிஸ்டிக் 2025 வாழ்நாள் சாதனையாளர் விருது நடிகை லதா அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

5 /7

அதேபோல் பின்னணி பாடகி வந்தனா சீனிவாசன், பாடகி ஸ்ரீலேகா பார்த்தசாரதி, ஆடை வடிவமைப்பாளர் பந்தனா நருடா, RJ சிவசங்கர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.  

6 /7

சின்னத்திரை கலைஞர் பவித்ரா, மிஸ் யுனிவர்ஸ் தமிழ்நாடு லக்க்ஷிதா திலகராஜ் உள்ளிட்ட தங்களின் துறைகளில் சாதித்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

7 /7

விருதுகளை பெற்றுக் கொண்ட அனைவரும் தங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இத்தகைய விருதுகள் மூலம் மேலும் தங்களது துறைகளில் சாதிக்க வேண்டும் என்கிற ஊக்கம் ஏற்படுவதாக கூறினர்.