'மருது' படத்தை தொடர்ந்து மீண்டும் முத்தையாவுடன் விஷால்?

இயக்குனர் முத்தையா இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிகர் விஷால் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 17, 2022, 02:35 PM IST
  • ஏ.வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகும் படம் 'லத்தி'.
  • இயக்குனர் முத்தையா இயக்கும் பெயரிடப்படாத புதிய படமொன்றில் விஷால் நடிக்க இருக்கிறார்.
'மருது' படத்தை தொடர்ந்து மீண்டும் முத்தையாவுடன் விஷால்?  title=

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறமையுடன் தமிழ் திரையுலகில் வலம் வருபவர் விஷால். தமிழில் இவருக்கென்று குறிப்பிட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, இவரின் ஆரம்பகால படங்களே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றுத்தந்தது.  தற்போது தனது திறமையால் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள இவர் அடுத்த ஆண்டு வரை படுபிஸியாக இருக்கப்போகிறார். 

ALSO READ | மீண்டும் இணையும் 'டிக்கிலோனா' பட கூட்டணி!

இந்த 2022 முதல் 2023 வரை இவரை பிசியாக வைக்க பல படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.  அந்த வகையில் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகும் படம் 'லத்தி'.  நீண்ட இடைவெளிக்கு பின்னர் சுனைனா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார்.  இப்படத்தை ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ராணா மற்றும் நந்தா இணைத்து தயாரிக்கின்றனர்.  இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  மேலும் இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. 

இதனைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கப்போகும் மற்றொரு படம் 'மார்க் ஆண்டனி'.  அதிக பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.  ஆக்சன் கதைக்களத்தில் உருவாகப்போகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.  அடுத்ததாக 2017ம் ஆண்டு வெளியான 'துப்பறிவாளன்' முதல் பாகத்தின் தொடர்ச்சியாக 'துப்பறிவாளன்-2' படம் உருவாகுகிறது.  இந்த படத்தை விஷால் தானே சொந்தமாக இயக்கி நடித்துள்ளார்.  மேலும் இதில் பிரசன்னா, ஆயிஷா, ரஹ்மான், நாசர் ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர்.  

vishal

மேலும் இயக்குனர் முத்தையா இயக்கும் பெயரிடப்படாத புதிய படமொன்றில் விஷால் நடிக்க இருக்கிறார்.  இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கிறார்.  இந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே முத்தையா இயக்கத்தில் விஷால் 'மருது' படத்தில் நடித்திருந்தநிலையில், தற்போது மீண்டும் அவர் இயக்குனர் முத்தையாவுடன் இணைந்துள்ளார்.

ALSO READ | சூர்யாவுக்காக சிவகார்த்திகேயனின் பாடல் வரிகள் எப்படி உள்ளது?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News