Trisha Tweets About Kuvathur Controversy: கூவத்தூரில் பிரபல சட்டமன்ற உறுப்பினருடன் இருக்க த்ரிஷா ரூ.25 லட்சம் வாங்கியதாக முன்னாள் அதிமுக உறுப்பினர் குற்றச்சாட்டுகளை வைத்த நிலையில் அதற்கு த்ரிஷா பதிலடி கொடுத்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பதிவினை வெளியிட்டிருக்கிறார்.
It's disgusting to repeatedly see low lives and despicable human beings who will stoop down to any level to gain https://t.co/dcxBo5K7vL assured,necessary and severe action will be taken.Anything that needs to be said and done henceforth will be from my legal department.
— Trish (@trishtrashers) February 20, 2024
கூவத்தூர் சர்ச்சை:
அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு எடப்பாடி பழனிசாமி குறித்து பல புகார்களை கடந்த சில நாட்களாக அடுக்கி வருகிறார். சமீபத்தில் தான் கலந்து கொண்ட பத்திரிக்கையளர்கள் சந்திப்பில் அவர் த்ரஷா குறித்து கூறியுள்ள கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | அதிர்ச்சி! துணிவு பட நடிகர் திடீர் மரணம்..ஷாக்கில் ரசிகர்கள்!
கூவத்தூரில், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் த்ரிஷாவுடன் இருந்ததாகவும், இதற்காக அவருக்கு ரூ25 லட்சம் கொடுக்கப்பட்டதாகவும் சமீபத்திய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஏ.வி.ராஜு கூறினார். நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ்தான், கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுக்காக நடிகைகளை அழைத்து வர ஏற்பாடு செய்ததாக கூறிய அவர், இந்த ஏற்பாட்டுக்கெல்லாம் பணம் கொடுத்தது எடப்பாடி பழனிசாமிதான் என்றும் தெரிவித்திருந்தார். ஏ.வி.ராஜு, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் குடிக்கமாட்டார் என்றும் ஆனால் பெண்கள் விஷயத்தில் வீக் என்றும் தெரிவித்தார்.
ஆதாரம் எங்கே?
ஏ.வி ராஜு பேசிய விஷயங்களுக்கெல்லாம் அவரிடம் ஆதாரம் இருக்கிறதா என கேட்கப்பட்டது. அதற்கு அவர், “பெண்களுடன் இருப்பதையெல்லாமா ஆதாரமாக காண்பிக்க முடியும்” என்று கூறினார். இவர் பேசிய இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக மாறியதை அடுத்து, உண்மை என்னவென்று தெரியாமல் பலரும் இதை வைரலாக்கி வந்தனர். இதையடுத்து, இதில் உள்ள உண்மை என்னவென்று தெரியாத பலர் த்ரிஷாவை டார்கெட் செய்து மீம்ஸ்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில்தான் த்ரிஷா அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் இந்த பதிவினை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பாக உள்ளது...இதற்கு மேல் என்ன பேச வேண்டும் என்றாலும் எனது சட்ட ஆலோசகர்களிடம் பேசிக்கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ