2024-ல் பெரிய ஹிட் அடித்த 5 சிறிய பட்ஜெட் தமிழ் படங்கள்! லிஸ்ட் இதோ..

Top 5 Low Budget Tamil Movies Of 2024 : தமிழ் திரையுலகில், இந்த ஆண்டில் வெளியான சில படங்கள் எதிர்பார்க்காத ஹிட் அடித்தன. அந்த படங்கள் என்னென்ன தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Nov 25, 2024, 01:45 PM IST
  • 2024-ல் வெளியான சிறிய பட்ஜெட் படங்கள்!
  • டாப் 5 படங்கள் என்னென்ன?
  • முதல் இடத்தில் இருப்பது யார்?
2024-ல் பெரிய ஹிட் அடித்த 5 சிறிய பட்ஜெட் தமிழ் படங்கள்! லிஸ்ட் இதோ.. title=

Top 5 Low Budget Tamil Movies Of 2024 : கோலிவுட் திரையுலகை பொறுத்தவரை, இந்த ஆண்டின் முதல் பாதியில் பெரிய ஹீரோக்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அப்படி பின்னர் வெளியான படங்களில், ஒரு சில மட்டுமே நிலையான வெற்றியை பெற்றன. ஆனால், சிறிய பட்ஜெட்டில் உருவான ஒரு சில படங்கள், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. அப்படிப்பட்ட படங்கள் என்னென்ன தெரியுமா? 

5.கொட்டுக்காளி:

சூரி-அன்னா பென் நடிப்பில் உருவான படம், கொட்டுக்காளி. 4 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் இது. பல்வேறு விருது விழாக்களுக்கு இப்படம் அனுப்பப்பட்டிருந்ததால் திரையரங்குகளில் வெளியாக தாமதம் ஆனது. இந்த படத்தை, பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியிருந்தார். சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தின் ஒவ்வாெரு ஃபேரேமும் பயங்கரமாக இருந்ததாக படம் பார்த்தவர்கள் விமர்சனத்தை தெரிவித்தனர். இப்படம், சுமார் 30 கோடி செலவில் தயாரானதாக கூறப்படுகிறது. வசூலில் பெரிதாக இல்லை என்றாலும், இப்படம் பல உலக விருதுகளை பெற்றிருக்கிறது. இந்த படத்தை ஆஹா தமிழ் தளத்தில் பார்க்கலாம். 

4.லவ்வர்:

மணிகண்டன் நடிப்பில், கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி வெளியான படம், லவ்வர். இந்த படத்தை பிரபுராம் வியாஸ் இயக்கியிருந்தார். சினிமாவில் பல ஆண்டுகளாக பேசப்படாத டாக்ஸிக் காதலை, இந்த படம் பேசியிருந்தது. இதில், மணிகண்டனின் காதலியாக கெளரி பிரியா நடித்திருந்தார். இப்படத்தை பார்த்த போது, பலருக்கு கருத்துகள் வேறு மாதிரியாக இருந்தன. ஆனால் படமோ, சரியான ரசிகர்களை சென்றடைந்து வெற்றி பெற்றது. இப்படம், ரஜினிகாந்த் நடித்திருந்த லால் சலாம் படத்துடன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம். 

3.வாழை:

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம், வாழை. உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம், ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டுமன்றி வசூலையும் குவித்தது. இந்த படத்தை ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம். 

மேலும் படிக்க | 2024-ல் முதல் நாளிலேயே அதிக வசூல் பார்த்த டாப் 5 தமிழ் படங்கள்! முதல் இடத்தில் யார் படம்?

2.லப்பர் பந்து:

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகியிருந்த படம், லப்பர் பந்து. இந்த படத்தில், ஹரீஷ் கல்யாண்-அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஸ்வாசிகா, கீதா கைலாசம், தேவதர்ஷினி ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியான இந்த படம், இந்த ஆண்டில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற படங்களுள் ஒன்றாகும். சுமார் ரூ.5 கோடி செலவில் உருவான இந்த படம், மொத்தம் 44,36 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். 

1.மகாராஜா:

நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவான படம், மகாராஜா. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாச்சனா, நட்ராஜன் நட்டி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம், தமிழ் சினிமாவின் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

த்ரில்லர் கதையை அடிப்படையாக கொண்ட இந்த படம், விஜய் சேதுபதிக்கும் கம்-பேக் படமாக அமைந்திருந்தது.  உலகளவில் இப்படம் சுமார் ரூ.110 கோடியை கலெக்ட் செய்தது. ஆனால் இப்படம் உருவானது, ரூ.20 கோடி செலவில். இதனை, நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம். 

மேலும் படிக்க | படிக்க | 2024-ல் பெரிதும் ஏமாற்றமளித்த 2 தமிழ் படங்கள்! ஒன்னு கங்குவா..இன்னொன்னு எது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News