#TNStandWithSuriya: நீட் குறித்து சூர்யா வெளியிட்ட அறிக்கைக்கு ரசிகர்களிடமிருந்து பெரும் ஆதரவு

சூர்யாவுக்கு பெரும் அளவு ரசிகர்களின் கூட்டம் இருக்கிறது, அவரது நடிப்பு திறமை, மற்றும் சினிமா மீதான அவரது அர்ப்பணிப்பு ரசிகர்களை அவர் பக்கம் இழுக்க வைத்துள்ளது. 

Last Updated : Sep 14, 2020, 06:09 PM IST
#TNStandWithSuriya: நீட் குறித்து சூர்யா வெளியிட்ட அறிக்கைக்கு ரசிகர்களிடமிருந்து பெரும் ஆதரவு title=

நடிகர் சூர்யா (Actor Suriya)வுக்கு பெரும் அளவு ரசிகர்களின் கூட்டம் இருக்கிறது, அவரது நடிப்பு திறமை, மற்றும் சினிமா மீதான அவரது அர்ப்பணிப்பு ரசிகர்களை அவர் பக்கம் இழுக்க வைத்துள்ளது. சூர்யாவின் நாட்டின் வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை கொண்டவர், தன்னார்வ தொண்டு நிறுவனம் (NGO) மூலம் பல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். நேற்று, நடிகர் சூர்யா (Actor Suriya) தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் நீட் தேர்வு தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டார் அதில்,

அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாகக் கொண்டு வருகிறது. மகாபாரத காலத்து (Manuneethi Tests) துரோணர்கள்‌ ஏகலைவன்களிடம்‌ கட்டை விரலை மட்டுமே காணிக்கையாகக் கேட்டார்கள்‌. நவீனகால துரோணர்கள்‌ முன்னெச்சரிக்கையுடன்‌ ஆறாம்‌ வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும்‌ என்று கேட்‌கிறார்கள். ஏழை, எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது எனக்கூறியிருந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒட்டுமொத்த தமிழக (Tamil Nadu People) மக்களின் எண்ண ஓட்டத்தை நடிகர் சூர்யா (Actor Suriya) பிரதிபலித்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

அதேநேரத்தில், நடிகர் சூர்யாவின் (Suriya Sivakumar) கருத்து நீதிமன்றத்தின் மாண்பை அவமதிக்கும் வகையில் உள்ளதாகக்கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற (Chennai High Court) நீதிபதிக்கு எஸ்.எம்.சுப்ரமணியம் (SM Balasubramaniam) கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இதை எதையும் பொருட்படுத்தாமல், மாணவர்கள் மீது அக்கறை கொண்ட சூர்யா, மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒன்றிணைவோம்.. மாணவர்களோடு துணை நிற்போம்" எனப் பதிவிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த காணொளியில் "ஒன்றிணைவோம்.. மாணவர்களோடு துணை நிற்போம். ஒருத்தர் படிச்சா அந்த வீடு மாறும், ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும். இந்தப் பொருளாதார நெருக்கடியில் நிறைய மாணவர்கள் தங்களடைய கல்வியை பாதியில் கைவிட்டு இருக்கிறார்கள். நாம நினைச்சா அத மாத்திடலாம்" எனக் கூறியுள்ளார்.

இவரது இந்த பதிவை ஆதரித்து அவருக்கு ரசிகர்களிடமிருந்து பெரும் ஆதரவு அளித்து வருகிறது. 

 

ALSO READ | ஒருத்தர் படிச்சா அந்த வீடு மாறும்; ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும் -சூர்யா

இந்த விவகாரத்தில் மேலும் வெளிச்சம் போட, நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது, மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவங்கள் விவாதத்தை எழுப்பின, மேலும் பலர் அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றனர். அரசாங்கம் சமத்துவமின்மையை உருவாக்கியது என்றும், ஏழை மாணவர்களின் கல்வி குறித்து சிந்திக்கவில்லை என்றும் நடிகர் சூர்யா (Actor Suriya) குற்றம் சாட்டியிருந்தார். நீட் தேர்வு தொடர்பாக சூர்யாவின் சமீபத்திய அறிக்கை நாடு முழுவதும் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைத் தூண்டியதுடன், சிலர் அரசாங்கத்தை விமர்சித்ததற்காக அவரைக் கண்டித்தனர். ஆனால் ரசிகர்கள் ட்விட்டரில் நட்சத்திரங்களுக்கு ஆதரவளித்து வருகிறார்கள், படங்களின் சக்திவாய்ந்த வசனங்களையும் காட்சிகளையும் மேற்கோள் காட்டி, #TNStandWithSuriya and #நீட்என்ற_மனுநீதிதேர்வு ஹேஷ் டேக்குகள் டிரெண்ட் ஆகி உள்ளன.

 

 

 

 

 

 

 

 

 

 

இதற்கிடையில், கோலிவுட்டைச் சேர்ந்த சில பிரபலங்களும் சூர்யாவின் கூற்றுக்கு ஆதரவாகவும், நீட் தேர்வுக்கு எதிராக குரல் பதிவு செய்தும் வந்துள்ளனர்.

Trending News