சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியை நேரில் காண வந்துள்ளார் ஹர்திக் பாண்டியாவின் காதலி ஜாஸ்மின் வாலியா.
சமீப நாட்களாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் பிரிட்டன் பாடகி ஜாஸ்மின் வாலியா டேட்டிங்கில் இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் காதலி என்று சொல்லப்படும் ஜாஸ்மின் வாலியா, இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை காண நேரில் வந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
கடந்த ஆண்டு நடாசா ஸ்டான்கோவிச்சும் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும் விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர். இது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது.
அதன் பிறகு ஹர்திக் பாண்டியாவும், ஜாஸ்மின் வாலியாவும் டேட்டிங்கில் இருப்பதாக செய்திகள் வெளியானது. இருவரும் கிரீஸில் ஒன்றாக விடுமுறையில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
பிரிட்டிஷ் பாடகி மற்றும் தொலைக்காட்சி பிரபலமான ஜாஸ்மின் ஆங்கிலம், பஞ்சாபி மற்றும் இந்தி மொழிகளில் பாடல்களை வெளியிட்டு பிரபலமடைந்தார்.
வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருக்கும் ஜாஸ்மின் வாலியா இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரில் காண வந்துள்ளது இவர்களது காதலை உறுதிப்படுத்தி உள்ளது.