தளபதி 69 பட நடிகை மமிதா விஜய் ரசிகையா? சூர்யா ரசிகையா?

Thalapathy 69 Actress Mamitha Baiju About Vijay And Suriya : தளபதி 69 படத்தில் நடித்து வரும் மமிதா பைஜுவிற்கு விஜய்யை ரொம்ப பிடிக்குமா? சூர்யாவை பிடிக்குமா? அவர் சொன்ன பதிலை இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Oct 7, 2024, 03:52 PM IST
  • தளபதி 69 படத்தில் இணைந்திருக்கும் நாயகி மமிதா
  • இவருக்கு விஜய் ரொம்ப பிடிக்குமா? சூர்யா ரொம்ப பிடிக்குமா?
  • அவர் சொன்ன பதில் என்ன?
தளபதி 69 பட நடிகை மமிதா விஜய் ரசிகையா? சூர்யா ரசிகையா?  title=

Thalapathy 69 Actress Mamitha Baiju About Vijay And Suriya : விஜய் நடிக்கும் அவரது கடைசி படத்தில் புதிதாக இணைந்திருக்கும் நடிகை, மமிதா பைஜு. இவர், மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழ் திரையுலகில் ரசிகர்கள் அதிகம். 

மமிதா பைஜு:

கேரள சினிமாவில் இருந்து, தமிழ் திரையுலகிற்கு நடிக்க வரும் கதாநாயகிகளை, இன்முகத்துடன் வரவேற்கும் குணமுடையது தமிழ் திரையுலகம். அப்படி, புதிதாக கோலிவுட்டிற்குள் நுழைந்திருப்பவர்தான், மமிதா பைஜு. 23 வயது இளம் நடிகையான இவர், முதலில் நடித்த படம், சூப்பர் ஷரண்யா. இந்த படம் பெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவருக்கு கிடைத்த வாய்ப்புதான், பிரேமலு திரைப்படம். 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான பிரேமலு திரைப்படம், இளைஞர்கள் மத்தியில் நல்ல கவனத்தை பெற்றது. இதில், ‘ரீனு’ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த அவர், தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார். 

மமிதா நடித்துள்ள தமிழ் திரைப்படங்கள்:

மமிதா, இந்த ஆண்டின் டாப் தென்னிந்திய ஹீரோயின்களுள் ஒருவராக இருக்கிறார். இவர், நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு நடித்த ரெபல் திரைப்படம் ரிலீஸானது. இதில் இவர், ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் பெரிதும் ஹிட் அடிக்கவில்லை என்றாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பிரபலமானார். இதற்கு முன்னர் அவர் நடித்த படம், வணங்கான். 

பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடித்து வந்தவர் சூர்யா. படம் பாதி ஷூட்டிங் முடிக்கப்பட்ட நிலையில், இனி இந்த படத்தில் நடிக்க முடியாது என்று சூர்யா கூறி இதிலிருந்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து மமிதாவும் இந்த படத்தில் இருந்து விலகினார். தற்போது, தளபதி 69 படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். 

மேலும் படிக்க | தளபதி 69 படத்தில் விஜய்யுடன் இணையும் 46 வயது பிரபல நடிகை! யார் தெரியுமா?

விஜய் பிடிக்குமா? சூர்யா பிடிக்குமா? 

கேரளாவை பொருத்தவரை, தமிழ் நடிகர்களான விஜய்-சூர்யா ஆகிய இருவருக்குமே ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதை வைத்து மமிதாவிடம் ஒரு முறை நேர்காணலில் இந்த கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, விஜய்யை தனது அபிமான நடிகர் என்று கூறிய அவர், தான் கில்லி படத்தில் இருந்தே அவரது ரசிகைதான் என்பதை தெரிவித்தார். இதே போல, சூர்யாவை பற்றியும் ஒரு பேட்டியில் அவர் பேசியிருக்கிறார். அதில், சூர்யாவை தான் முதன் முதலில் பார்த்த அனுபவத்தையும், ஜோதிகாவை சந்திக்கும் போது ஏற்பட்ட மகிழ்ச்சி குறித்தும் பேசியிருக்கிறார்.

Mamitha Baiju With Vijay

விஜய்யை பற்றி மமிதா பேசிய வீடியோவை, விஜய் ரசிகர்களும், சூர்யாவை பற்றி இவர் பேசியிருக்கும வீடியாேவை சூர்யா ரசிகர்களும் இணையத்தில் பதிவிட்டு, “இந்த பொண்ணு எங்க ஹீரோவுக்குதான் ரசிகை” என்று அடித்துக்கொள்கின்றனர். ஆனால் உண்மையில் மமிதாவிற்கு விஜய்-சூர்யா ஆகிய இருவருமே ஃபேவரெட் ஹீரோக்களாக இருக்கின்றனர். 

தளபதி 69 படத்தில் மமிதா:

விரைவில் அரசியலில் களமிறங்க இருக்கும் நடிகர் விஜய், தனது 69வது படத்தில் நடித்து முடித்து விட்டு, சினிமாவிற்கு குட்-பை கூற இருக்கிறார். இதையடுத்து, இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடந்தது. இதில் விஜய், ஹெச்.வினோத், பாபி டியோல், மமிதா, பூஜா ஹெக்டே, நரேன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தில் மமிதாவிற்கு விஜய்யின் தங்கை கேரக்டர் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | தளபதி 69 படத்தில் யாரும் எதிர்பார்க்காத 51 வயது நடிகர்! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News