Mars Retrograde In Cancer Zodiac Sign: கடகத்தில் செவ்வாய் பகவான் வக்ர நிலையில் பெயர்ச்சியாகும் நிலையில், 80 நாள்களுக்கு இந்த 5 ராசிக்காரர்களுக்கு அசுபமான காலகட்டமாகும்.
செவ்வாய் பகவான் வரும் டிச. 7ஆம் தேதி முதல் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் பகவான் வக்ர நிலையில் இருப்பார் என்பதால் இந்த 5 ராசிகளுக்கு கஷ்ட காலம் வரும்.
உங்களுக்கு நிலம், வாகனம், தைரியம், ஆற்றல் உள்ளிட்ட விஷயங்கள் கிடைக்க உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பகவான் நல்ல நிலையில் இருக்க வேண்டும். தற்போது இந்த செவ்வாய் கிரகம் வக்ர நிலைக்கு மாற உள்ளது.
வரும் டிச. 7ஆம் தேதி அன்று கடக ராசிக்கு செவ்வாய் பகவான் மாற உள்ளார். அங்கு அடுத்தாண்டு பிப்ரவரி 24ஆம் தேதி வரை வக்ர நிலையில் நீடிப்பார். அதாவது சுமார் 80 நாள்களுக்கு கடக ராசியில் செவ்வாய் பகவான் வக்ர நிலையில் இருப்பார்.
கடகத்தில் செவ்வாய் பகவானின் இந்த வக்ர நிலையால் 5 ராசிக்காரர்களுக்கு அசுபமான காலகட்டமாகும். அந்த 80 நாள்களை கடப்பது அவர்களுக்கு பெரும்பாடாக இருக்கும். அந்த 5 ராசிகள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
மகரம்: இந்த 80 நாள்களிலும் நீங்கள் பண பரிவர்த்தனையில் கவனமுடன் இருக்க வேண்டும். தொழிலில் பெரியளவில் பண நஷ்டம் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன. லாபம் வருவது குறையும். காதல் வாழ்விலும் சிக்கல்கள் வரும். திருமணமானவர்கள் தங்கள் இணையரிடம் கோபத்தை வெளிக்காட்டாமல் தவிருங்கள்.
துலாம்: இந்த காலகட்டத்திலும் நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். மனைவியுடன் தேவையின்றி வாக்குவாதம் செய்யக்கூடாது. தொழிலில் பணப்புழக்கம் குறையும். சொத்து விவகாரங்களில் கூட உங்களுக்கு பண நஷ்டம் ஏற்படலாம். தந்தையுடனான உறவு மோசமாகவும் வாய்ப்புள்ளது.
சிம்மம்: திருமணமான தம்பதிகள் தங்களுக்குள் சாந்தமான உறவில் இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையிலும் ஆயிரம் கஷ்டங்கள் அடுத்தடுத்து வரும். வணிகத்திலும் தொடர் நஷ்டம் ஏற்படலாம். குடும்பச் சொத்திலும் உங்களுக்கு பிரச்னை வரலாம். பணப்புழக்கமும் குறையும்.
கடகம்: வக்ர நிலையில்தான் செவ்வாய் பகவான் கடக ராசிக்குள் நுழைகிறார் என்பதால் இந்த 80 நாள்கள் கடினமான காலகட்டமாகும். பணியிடத்திலும் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உடன்பிறந்தவர்களுடனும் பிரச்னை வரலாம். தொழில், நிலம் சார்ந்தும் பண இழப்பு வரலாம்.
மிதுனம்: இந்த காலகட்டத்தில் வாழ்வில் கடினமான சூழல் நிலவும். பண இழப்பு ஏற்படும். தொழிலில் லாபத்தை பார்க்க கடினமாக உழைக்க வேண்டும். மூத்த சகோதரர் உடன் மோதல் போக்கு நிலவும். கோப்பைத்தை கட்டுப்படுத்தாவிட்டால் வேலையை கெடுத்துவிடும். திருமணமானவர்கள் தங்கள் மனைவியிடம் கவனமாக இருக்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை.