தமிழக நடிகை வரலட்சுமி போடா போடி படம் மூலம் அறிமுகமானார். பல படங்களில் நடித்திருந்தாலும், தாரை தப்பட்டை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
சமூகத்தில் பெண்கள் முன்னேற்றம் குறித்து பல விசியங்களை பேசிவருகிறார். அதேபோல விலங்குகள் குறித்து விழிப்புணர்வும் செய்து வருகிறார்.
இந்நிலையில், அவர் வளர்த்து வந்த டினோ என்ற நாய் இறந்துவிட்டது. இது குறித்து அவர் ட்விட்டரில் தன் சோகத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் டினோ நீ இந்த வீட்டில் ஒரு மனிதனாக இருந்தாய். எங்கள் மீது அளவில்லாமல் அன்பு செலுத்தியதற்கு நன்றி. நீ நல்ல இடத்தில் இருப்பாய் என நம்புகிறேன். உனக்கு நல்ல உணவு கிடைக்கும். நான் உன்னை இழந்துவிட்டேன். ஐ லவ் யூ டினோ பேபி என கூறியுள்ளார்.
#RIP DINO... U WERE THE MAN OF THE HOUSE..THANK U FOR LOVING US UNCONDITIONALLY...I'M SURE U R IN A BETTER PLACE..CHASING ALL THE BIRDS AND EATING AS MUCH AS U WANT..I LOVE U DINO BABY..I'M GONNA MISS U LIKE CRAZY..FIND PEACE MY LOVE.. pic.twitter.com/Nys26x19hd
— varu sarathkumar (@varusarath) February 5, 2018