Hair Growth Tips, Eggs: முட்டையில் வைட்டமிண்கள், கனிமங்கள், புரதச்சத்து ஆகியவை நிரம்பியிருப்பதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அது முக்கியமான உணவாக பார்க்கப்படுகிறது. அதனால், தமிழ்நாட்டு அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில் கூட மாணவர்களுக்கு அவித்த முட்டை வழங்கப்படுகிறது.
அந்தளவிற்கு முட்டையில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்க, அது உடலுக்கு மட்டுமின்றி தலைமுடி வளர்ச்சிக்கும், தலைமுடி ஆரோக்கியத்திற்கும் உதவும். முட்டையின் மஞ்சள் கரு மற்றும் முட்டையின் வெள்ளை கரு இரண்டிலும் தலைமுடி வலுவாகவும், நீளமாகவும், பளபளப்பாகவும் மாற்றும் பண்புகளை கொண்டுள்ளன. இருப்பினும், தலைமுடிக்கு முட்டையின் மஞ்சள் கரு நல்லதா, வெள்ளை கரு நல்லதா, இரண்டில் எதில் அதிக நன்மைகள் இருக்கிறது என்பது மக்களிடையே பொதுவாக இருக்கும் குழப்பம் ஆகும்.
தலைமுடி வளர்ச்சிக்கு எதில் அதிக நன்மை?
முட்டையின் மஞ்சள் கருவில்தான் அத்தியாவசியமான வைட்டமிண்கள் நிரம்பியிருக்கின்றன. மேலும் முடியின் வேர் வரை சென்று அதற்கு ஊட்டமளிக்கும் அதில் லிபிட்களும் உள்ளன. மாறாக வெள்ளைக் கரு தலைமுடியை சுத்தமாக்குவதிலும், உச்சந்தலையை இறுக்கமாக்கவும் வழிவகை செய்கிறது. அப்படியிருக்க, இந்த இரண்டில் எது தலைமுடி ஆரோக்கியத்திற்கு அதிக பயனளிக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | உடல் எடையை வேகமாக குறைக்க காலையில் இதை செய்தால் போதும்
தலைமுடி வளர்ச்சி: முட்டையின் வெள்ளைக் கருவில் உள்ள நன்மைகள்
முட்டையின் வெள்ளைக் கருவில் கொலாஜன் என்ற மூலக்கூறு இடம்பெற்றுள்ளது. இது தலைமுடியை வலுவாக்குவதில் உதவியாக இருக்கும். தலைமுடி உடைவது குறையும். மேலும், இந்த கொலாஜன் முடியின் வேர் வரை சென்று அதற்கு ஊட்டமளித்து, தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். உச்சந்தலையில் இறுக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
தலைமுடி வளர்ச்சி: முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள நன்மைகள்
தலைமுடி வளர்ச்சியில் முட்டையின் மஞ்சள் கருவும் சிறப்பான வகையில் உதவும். இதில் வைட்டமின் A, வைட்டமின் D, வைட்டமின் E, பயோட்டின் மற்றும் முக்கிய ஃபேட்டி அமிலங்கள் ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியமான கூந்தலுக்கு மிக முக்கியமானதாகும். வைட்டமின் ஏ சருமத்தை பாதுகாக்கும். இதனால், இயற்கையால் தலையில் சுரக்கும் எண்ணெய்க்கு பாதிப்பு இருக்காது. தலையில் இயற்கையாகவே வரும் எண்ணெய், உச்சந்தலையை எப்போதும் ஈரமாகவே வைத்திருக்கும். இதனால் தலையில் வறட்சி ஏற்படாது. பயோட்டின் பிஞ்சு முடிகளையும் வலுவாக்குகிறது. இதை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் தலைமுடி மெலிசாக மாறாது.
தலைமுடி வளர்ச்சி: முட்டையின் வெள்ளை கரு vs மஞ்சள் கரு
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் மூலம் நீங்களே ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். ஆம், முட்டையின் வெள்ளைக் கருவை பொறுத்தவரை உச்சந்தலையை சுத்தப்படுத்துவதில் இருந்து, எண்ணெய் வடியாமல் தடுப்பது வரை பயனளிக்கும் என்றாலும் மஞ்சள் கருவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் இல்லை. எனவே, நீங்கள் உங்களின் தலைமுடி பராமரிப்பில் அடிக்கடி மஞ்சள் கருவை பயன்படுத்துவதன் மூலம் தலைமுடி வளர்ச்சி அதிகமாகும். அதுமட்டுமின்றி இரண்டையும் நீங்கள் சேர்த்து பயன்படுத்தினாலும் பயன்கள் அதிகம்தான். எனவே முடிவு உங்கள் கையில்...
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை பின்பற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | 30 வயதிலேயே வயதான தோற்றம் தெரிகிறதா? உடனே இந்த பழக்கத்தை மாத்துங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ