அதிகமான மருத்துவ குணாதிசயங்கள் இந்த படிகார கற்களில் காணப்படுவதாக ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. ஆனால் இதனை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றி மக்கள் அறியாமல் இருக்கின்றனர். அந்தவகையில் இதன் பலன்கள் என்னவெல்லாம் நிறைந்துள்ளது என்பதை நீங்கள் நிச்சயம் அறிய வேண்டும்.
படிகார கல்லில் ஏராளமான மருத்துவ பண்புகளும் மற்றும் நன்மைகளும் நிறைந்துள்ளதாக ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. இந்த படிகார கல்லின் சிறப்பம்சங்கள் நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாகப் படிகார கல் வண்டிகளில் இருப்பதைப் பலரும் பார்த்திருப்பீர்கள். ஆனால் அது ஏன் அவர்கள் வைத்துள்ளார்கள் என்று தெரியுமா. படிகார கல்லின் சக்தியைப் பார்க்கலாம்.
படிகார கற்களில் அதிகமான கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது அதிர்வுகளை ஈர்த்துக் கொள்ளும் ஆற்றல் வல்லமை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்றும் கிராமங்களில் மக்கள் தண்ணீரைச் சுத்தப்படுத்தப் படிகார கற்களைப் பயன்படுத்தி வருவதாகத் தகவல் சொல்லப்படுகிறது.
பாதத்தில் விரல் புண் ஏற்பட்டால் இந்த படிகார கற்களை வைத்து மருத்து வைத்தியம் பார்க்கப்படும் என்று கூறப்படுகிறது. கெட்ட கிருமிகள் வளர்ச்சியை இது முற்றிலும் தடுக்கிறது.
தலை முடிப் பிரச்சனை: இந்த படிகார கற்களைப் பொடியாக்கி சீயக்காய் அல்லது ஷாம்புடன் சேர்த்து தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகு குறையும் என்று சொல்லப்படுகிறது. தலையில் ஏற்படும் அரிப்புகள் இந்த படிகார கற்கள் சரிசெய்யும் என்று கூறப்படுகிறது.
கெட்ட கனவு: தினமும் இரவில் தூங்கவிடாமல் கெட்ட கனவு வந்தால் நீங்கள் இந்த படிகார கற்களைக் கருப்பு துணியில் கட்டி தலையணையில் வைத்துத் தூங்கலாம் என்று சொல்லப்படுகிறது. இப்படித் தூங்குவதால் கெட்ட கனவுகள் வராதாம்.
படிகார கற்கள் பயன்: வண்டிகள் மற்றும் கடைகளின் வாசலில் படிகார கற்கள் வைப்பதால் திருஷ்டி எடுக்கும் எனவும், மேலும் எலுமிச்சை, மிளகாய் மற்றும் படிகார கற்கள் ஒன்றாகச் சேர்த்துக் கட்டினால் திருஷ்டி நீங்கும் எனவும் கூறப்படுகிறது.
வாஸ்து: படிகாரம் வீட்டில் மற்றும் அலுவலகங்களில் வைத்தால் திருஷ்டி குறையும். படிகார கற்கள் நிறம் மாறும்போது அதனை உடனடியாக எடுத்து வேறொரு படிகார கற்களை வைக்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.