Thalapathy 69 : தளபதி 69 படத்தின் பூஜை புகைப்படங்கள்! விஜய் அசத்தலா இருக்காறே!!!

Thalapathy 69 Pooja Ceremony Photos : தளபதி 69 படத்தின் பூஜை புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. இதில் விஜய் அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

Written by - Yuvashree | Last Updated : Oct 4, 2024, 03:09 PM IST
  • தளபதி 69 பூஜை புகைப்படங்கள்
  • வேட்டி சட்டையில் விஜய்
  • வைரலாகும் புகைப்படங்கள்...!
Thalapathy 69 : தளபதி 69 படத்தின் பூஜை புகைப்படங்கள்! விஜய் அசத்தலா இருக்காறே!!! title=

Thalapathy 69 Pooja Ceremony Photos : விஜய்யின் கடைசி படமாக அமைந்திருக்கும் தளபதி 69 படத்தின் திரைப்பட பூஜை, இன்று சென்னையில் நடைப்பெற்றது. பூஜை தொடங்கியதை அடுத்து, இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பும் தொடங்க இருக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் பூஜையில் இயக்குநர், தயாரிப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், வேட்டி சட்டையில் இருக்கும் விஜய்யை பார்த்து ரசித்து வருகின்றனர். 

பல பாகங்களாக தளபதி 69 படத்தின் போட்டோக்கள் வெளியாகி இருக்கிறது. விஜய், இந்த படத்திற்காக புது கெட்-அப்பில் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

 

தளபதி 69:

இன்னும் சில மாதங்களில் முழுமையாக அரசியலில் களம் காண இருக்கும் நடிகர் விஜய், தனது 69வது படத்திற்கு பிறகு முழுமையாக சினிமாவிற்கு முழுக்கு போடுவதாக கூறியிருக்கிறார். இதையடுத்து, அவர் கடைசியாக கமிட் ஆகியிருக்கும் படத்தில் மட்டும் நடித்து முடிக்க இருக்கிறார். அதற்காகத்தான், ஹெச்.வினோத்துடன் கைக்கோர்த்திருக்கிறார். இந்த படம், ஒரு அரசியல் த்ரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Thalapathy 69

பீஸ்ட் படத்திற்கு பிறகு, தளபதி 69 படம் மூலமாக விஜய்யுடன் ஜோடியாக நடிக்கிறார் பூஜா ஹெக்டே. இதையடுத்து, இந்த ஜோடியை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதில், மலையாள நடிகை மமிதா பைஜுவும் நடிக்கிறார். அவர், இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிப்பதாக கூறப்படுகிறது. அனிமல் படத்தில் வில்லனாக மிரட்டிய பாபி டியோலுக்கு, தற்போது தமிழ் உள்பட தென்னிந்திய சினிமாவில் பட வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது. சூர்யா நடிப்பில் உருவான கங்குவா படத்தில் வில்லனாக நடித்திருக்கும் இவர், அடுத்து தளபதி 69 படத்திலும் வில்லனாக நடிக்கிறார். அக்டோபர் 4ஆம் தேதியான இன்று நடைப்பெற்ற தளபதி 69 படத்தின் பூஜை விழாவில் அவரும் கலந்து கொண்டார். 

மேலும் படிக்க | தளபதி 69 படத்தில் விஜய்யுடன் இணையும் 46 வயது பிரபல நடிகை! யார் தெரியுமா?

வேட்டி சட்டையில் கலக்கிய விஜய்!!

நடிகர் விஜய், இப்போது வெறும் நடிகர் மட்டுமல்ல, ‘தமிழக வெற்றிக்கழகம்’ எனும் அரசியல் கட்சியின் தலைவர் என்பது அனைவருக்கும் தெரியும். பொதுவாக, அரசியலுக்கு வருபவர்கள் அனைவரும் எங்கு சென்றாலும் வேட்டி சட்டையில்தான் செல்வர். அதனை, விஜய்யும் கடைப்பிடிக்க தொடங்கிவிட்டார். இவர் கடைசியாக நடித்த தி கோட் படத்தின் பூஜை விழாவில் டீ-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்து கலந்து கொண்ட இவர், தளபதி 69 படத்திற்காக வேட்டி-சட்டை அணிந்து வந்திருக்கிறார். ஆனால் இதுவும் நன்றாகத்தான் இருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Thalapathy 69

வெகு விரைவில், விக்கரவண்டியில் த.வெ.க கட்சியின் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய், தன் அரசியல் பயணத்தை எந்த திட்டத்துடன் தொடங்கப்போகிறார் என்பது குறித்து தெரிந்து கொள்ளவும், அவர் தேர்தலில் களம் காணும் போது என்ன செய்ய காத்திருக்கிறார் என்பதை பார்க்கவும் ரசிகர்களும் மக்களும் ஆர்வமுடன் வெயிட்டிங்கில் இருக்கின்றனர். 

மேலும் படிக்க | தளபதி 69 படத்தில் யாரும் எதிர்பார்க்காத 51 வயது நடிகர்! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News