Bigg Boss 8 Tamil Double Eviction : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் இறுதிக்கட்டத்தை எட்ட உள்ளது. இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் தோற்று வெளியேறிய போட்டியாளர்கள், மீண்டும் போட்டிக்குள் நுழையும் நிகழ்வு நடைப்பெற்றது. இதில் முன்னாள் தொட்டியாளர்கள் சிலர் சொன்ன விஷயங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
பிக்பாஸ் 8 எவிக்ஷன்:
தமிழில் உள்ள ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் ஓரளவிற்கு வரவேற்பு பெற்று 8 சீசன்களைத் தாண்டி ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, பிக்பாஸ். 8வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதற்கு முன்னர் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசனங்களில் ஓரளவிற்கு பிரபலமான துணை நடிகர்கள், சீரியல் நடிகர்கள், டிஜிட்டல் பிரபலங்கள் ஆகியோரை போட்டியாளர்களாக அழைத்தனர். ஆனால், இந்த சீசனில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட ஒரு சேனலை சேர்ந்தவர்களாக இருந்தனர். இதுவே, ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சியில் முதல் வாரம் முதலே வலுவான போட்டியாளர்களாக கருதப்பட்ட பலர் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். ரவீந்தர் தொடங்கி வரிசையாக தர்ஷா குத்தா, தர்ஷிகா, ரஞ்சித், ஜெஃப்ரி, அன்ஷிதா என மஞ்சரி வரை பலர் எவிக்ட் ஆகினர். இதையடுத்து இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெளியேறிய இரண்டு பேர்:
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இரண்டு பேர் எவிக்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், முதலாவதாக வெளியேற்றப்பட்டுள்ள போட்டியாளர் அருண் என கூறப்படுகிறது. பாரதிகண்ணம்மா தொடர் மூலம் பிரபலமான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த புதிதில் கொஞ்சம் அமைதியாக அடக்கி வாசித்தார். அதன் பின்பு பல விஷயங்களை பேசி ரசிகர்களை ஈர்த்த இவர், முன்னாள் பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் காதலர் ஆவார்.
96 நாட்களைக் கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக அங்கம் வகித்த அருண் வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரை தொடர்ந்து, முக்கிய போட்டியாளரான இன்னொருவரும் வெளியேற்றப்பட்டுள்ளார்.
யார் அவர்?
பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் முதல் நாள் தொடங்கி இப்போது வரை தெளிவாக பேசி வந்த ஒரு போட்டியாளர் தீபக். 45 வயதாகும் இவர் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான முகமாக இருக்கிறார். சீரியல்களில் நடித்து வந்த இவர் இதற்கு முன்னர் பல ஆடல் பாடல் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். முன்னர் பிக்பாஸில், ஆண்கள் அணி-பெண்கள் அணி என்று தனியாக விளையாடி வந்த போது தன்னுடன் இருந்தவர்களை இவர் சரியாக வழிநடத்தி வந்ததாக கூறப்பட்ட. டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக இருந்த இவர், டைட்டில் வின்னராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அவர் டபுள் எவிக்ஷனில் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் அதிருப்தி!
பிக்பாஸில், ரசிகர்கள் எதிர்பார்க்காதவர்கள் வெளியேற்றப்படுவது சகஜம். இதை பலர் ஏற்றுக்கொள்ளாமல் பல சமயங்களில் அதற்கு எதிராக கருத்துகளை தெரிவிப்பர். அந்த வகையில் தீபக் மற்றும் அருணின் எவிக்ஷன் குறித்தும் பலர் இணையதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல, டைட்டில் வின்னர் யார் என்பது குறித்த சூடான விவாதங்களும் இணையத்தில் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | பிக்பாஸ் சீசன் 8யில் வெளியேறிய ராணவ் மற்றும் மஞ்சரி ஒருநாள் சம்பளம் இவ்வளவா!
மேலும் படிக்க | பிக்பாஸ் 8: டபுள் எவிக்ஷனில் வெளியேறிய சத்யா-தர்ஷிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ