Vidaamuyarchi Day 7 Box Office Collection : அஜித் குமார் நடிப்பில் வெளியாகியிருக்கும் விடாமுயற்சி படம் ஒரு வாரத்தில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம்!
Vidaamuyarchi Day 7 Box Office Collection : மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் விடாமுயற்சி. இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 2 வருடத்திற்கு பிறகு வெளியாகும் அஜித் படம் என்பதால் இதன் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருந்தது. படம் ஒரு வாரத்திற்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்க்கலாம்.
விடாமுயற்சி படம் பொங்கலன்று ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட பின்பு, படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் தாமதம் ஏற்பட்டதால் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த மாதம் 6ஆம் தேதி வெளியான விடாமுயற்சி படம், வெளியான முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைத்தான் பெற்று வந்தது.
விடாமுயற்சி படத்தின் ஆக்ஷன் காட்சிகளும், ஒளிப்பதிவும் பாராட்டப்பட்டாலும், அஜித்திற்கு இதில் பெரிய மாஸ் காட்சிகள் எதுவும் இல்லாதது ரசிகர்களால் பெரிய குறையாக பார்க்கப்பட்டது.
விடாமுயற்சி படம், ரிலீஸான முதல் நாளில் சுமார் ரூ.26 கோடி கலெக்ட் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது இப்படம் வெளியாகி 7 நாட்கள் ஆகியிருக்கிறது.
கடந்த வீக்-எண்டிலேயே சரியான வசூலை பெற முடியாமல் விடாமுயற்சி படம் தினறியதாக கூறப்படுகிறது. இதனால், வாரத்தின் வேலை நாட்களில் இப்படத்தை பார்க்க ஆள் இல்லாமல், தியேட்டர்களில் ஈ அடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலை தாண்டியதாக கூறப்படுகிறது. இந்திய அளவில் 82.1 கோடியையும், வெளி நாடுகளில் 35.4 கோடியையும் இப்படம் கலெக்ட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வசூல் விவரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.