வித்தியாசமான திரில்லர்! தருணம் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

Tharunam Movie Review: தேஜாவு படத்தை இயக்கிய அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள தருணம் படம் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Written by - RK Spark | Last Updated : Jan 14, 2025, 06:59 AM IST
  • இன்று வெளியாகியுள்ள தருணம் படம்.
  • கிஷன் தாஸ், ஸ்ம்ருதி வெங்கட் நடித்துள்ளனர்.
  • அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கி உள்ளார்.
வித்தியாசமான திரில்லர்! தருணம் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்! title=

அருள்நிதியை வைத்து தேஜாவு என்ற வித்தியாசமான திரில்லர் படத்தில் இயக்கியவர் தான் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். அவரது அடுத்த படமான தருணம் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் புகாஸ் மற்றும் ஈடன் இந்த படத்தை தயாரித்துள்ளனர். கிஷன் தாஸ், ஸ்ம்ருதி வெங்கட், ராஜ் ஐயப்பன், பாலா சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைக்க, ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவும், அருள் இளங்கோ சித்தார்த் எடிட்டிங்கும் செய்துள்ளனர்.

மேலும் படிக்க | ஷங்கர் vs அதிதி ஷங்கர்: அப்பாவுக்கு போட்டியாக மாறிய மகள்! எப்படி தெரியுமா?

படத்தின் கதை

சிஆர்பிஎப் போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் ஹீரோ கிஷன் தாஸ் ஒரு ஆபரேஷனில் தன்னுடைய சக டீம்மெட்டையே தெரியாமல் சுட்டு விடுகிறார், இதனால் பணியில் இருந்து சிறிது காலம் ஓய்வில் இருக்கிறார். மறுபடியும் ஹீரோயின் ஸ்ம்ருதி வெங்கட் ஒரு கார் விபத்தில் சிக்குகிறார். இவர்கள் இருவரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்திக்கின்றனர். அதன் பிறகு இருவருக்கும் காதல் ஏற்படுகிறது, இந்த காதல் நிச்சயதார்த்தம் வரை செல்கிறது. இந்நிலையில் ஸ்ம்ருதி வெங்கட் நண்பர் ராஜ் ஐயப்பனிக்கு இவர்களது காதல் பிடிக்கவில்லை. எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தி ஸ்ம்ருதி வெங்கட்டை தன்வசம் வைத்துக்கொள்ள நினைக்கிறார். அந்த சமயத்தில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது, அதன் பிறகு என்ன  ஆனது என்பதே தருணம் படத்தின் கதை.

அந்தந்த தருணத்தில் ஒவ்வொருவரும் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை ஒரு ரொமாண்டிக் திரில்லர் வடிவில் கொடுத்துள்ளார் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். முதல் பகுதி முழுக்க ஒரு காதல் கதையும் இரண்டாம் பாதி முழுக்க ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தையும் கொடுத்துள்ளார். காதல், சண்டை, எமோஷனல் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் தருணம் படம் அமைந்துள்ளது. முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான கிஷன் தாஸ் இந்த படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் அந்த பாடி லாங்குவேஜ் கொண்டுவர சிரமப்பட்டாலும் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து உள்ளார். இன்வெஸ்டிகேஷன் காட்சிகளில் அவரது நடிப்பு நன்றாகவே இருந்தது. இரண்டாம் பாதி முழுக்கவே பரபரப்பான காட்சிகளிலும் எதார்த்தமாக நடித்திருந்தார். ஸ்ம்ருதி வெங்கட்டிற்கு படம் முழுக்க வரும் கதாபாத்திரம், அதனை புரிந்து கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வில்லன் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் ராஜ் ஐயப்பா நன்றாகவே நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் தான் படத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துகிறது. பால சரவணன் வழக்கம்போல தனது ஒன்லைன் பஞ்ச்களில் சிரிக்க வைக்கிறார்.  இரண்டாம் பாதி முழுக்க ஒரே இடத்தில் நடைபெற்றாலும் பெரிதாக போரடிக்கவில்லை.

அதற்கு முக்கிய காரணம் ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவும், அருள் இளங்கோ சித்தார்த் எடிட்டிங் தான். தர்புகா சிவாவின் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசையில் அசத்தி உள்ளார். அவரது பின்னணி இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. மொத்தமாக பார்ப்பதற்கு ஒரு நல்ல திரில்லர் படத்தின் பீல் கொடுத்தாலும் தருணம் இன்னும் நல்ல ஒரு படமாக அமைந்திருக்கலாம். படத்தின் கேஸ்டிங் முக்கிய பிரச்சினையாக உள்ளது. நடிகர்கள் நன்றாக நடித்திருந்தாலும் அந்தந்த கதாபாத்திரத்திற்கு ஒட்டவில்லை. குறிப்பாக ஹீரோ கிஷன் தாஸ், ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்று சொன்னாலும் நம்பும்படி இல்லை. அதேபோல் இரண்டாம் பாதியில் பல இடங்களில் லாஜிக் மீறல்களும் உள்ளன. இரண்டாம் பாதியில் வரும் விறுவிறுப்பான காட்சிகளை பார்க்க முதல் பாதி முழுக்க பொறுமையாக பார்க்க வேண்டும். சிறு சிறு குறைகள் இருந்தாலும் திரில்லர் பட ரசிகர்கள் தருணம் படத்தை பார்க்கலாம்.

மேலும் படிக்க | நேசிப்பாயா படம் ‘இப்படி’தான் இருக்கும்! இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறிய விஷயம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News