கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், இன்று 39 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு விருந்தாக, மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் “டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” படத்தின் அசத்தலான கிளிம்ப்ஸ் படக்குழு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ, யாஷின் ஸ்டைல் மற்றும் மாஸ் கலவையைப் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்துகிறது. பிறந்தநாள் பீக் வீடியோவில், யாஷ் மிருதுவான வெள்ளை நிற உடையில், ஃபெடோரா மற்றும் ஒரு சுருட்டைப் பிடித்தபடி, ஒரு கிளப்புக்குள் நுழைகிறார்.
மேலும் படிக்க | விடாமுயற்சி அவுட்-குட் பேட் அக்லி இன்! படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..
கிளப்பின் கண்ணைக் கவரும் சூழல், ஆடம்பரம், மகிழ்ச்சி மற்றும் அதிரடி இசை மனதை மயக்குகிறது. யாஷின் ஸ்டைல் தோற்றம் மற்றும் மாஸ், அறையில் உள்ள ஒவ்வொரு பார்வையும் அவரை நோக்கி ஈர்க்கிறது. இந்த அதிரடி டீஸர், பார்வையாளர்கள் மனதை மயக்கி, வசீகரிக்கும் மற்றொரு உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது, இது எல்லைகளைத் தாண்டிய ஒரு சினிமா அனுபவமாக உருவாகியுள்ளது. யாஷ் மற்றும் டாக்ஸிக் படத்தின் உலகத்தை உருவாக்குவது குறித்துப் பேசிய இயக்குநர் கீது மோகன்தாஸ் கூறியதாவது, “டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்” என்பது மரபை மீறும் மற்றும் நமக்குள் குழப்பத்தைத் தூண்டும் ஒரு வித்தியாசமான கதை.
Rocking Star @TheNameIsYash has always been about breaking barriers, and #ToxicTheMovie is yet another step in that direction.
From the raw innocence of 'Kirataka' to the larger-than-life spectacle of 'KGF', he's shown us his versatility. Now, with Toxic, he's diving into… pic.twitter.com/ORSAffQogC
— Bhargavi (@IamHCB) January 8, 2025
இன்று, எங்கள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு, யாஷ்-ஐ கொண்டாடுகிறோம். யாஷ் ஒரு தனித்துவமான மனிதர், அவரது புத்திசாலித்தனத்தை நான் கவனித்திருக்கிறேன், அவரை அறிந்தவர்களுக்கு அல்லது அவரது பயணத்தைப் பின்தொடர்பவர்களுக்கு, அவரது செயல்முறை மர்மமானதாக இருப்பது போல் தோன்றும். ஆனால் அவர் உண்மையில் தனித்துவமானவர். அதே போல் டாக்ஸிக் படத்தின் வசீகரிக்கும் உலகத்தை மற்றவர்கள் சாதாரணமாகப் பார்க்கும் இடத்தில், அசாதாரணமானதைக் காணும் மனதுடன் இணைந்து உருவாக்கியது ஒரு பாக்கியம் மற்றும் சிலிர்ப்பான அனுபவமாகும். எங்கள் இரு சிந்தனையும் இணைந்து, மொழிகள் மற்றும் கலாச்சார எல்லைகளைத் தாண்டி வணிகக் கதை சொல்லலின் துல்லியத்தைச் சந்திக்கும் மாற்றமாக இப்படம் இருக்கும்.
நம் அனைவருக்குள்ளும் முதன்மையான சந்தோஷத்தைத் தூண்டும் வகையில், ஒரு மாறுபட்ட அனுபவத்தைக் கொண்டு வருவோம் என்று நம்புகிறோம். இது பார்ப்பதற்கு மட்டுமல்ல, உணரப்பட வேண்டிய திரைப்படம். படைப்பின் பயணம் புனிதமானது என்பதை அவர் எனக்குக் கற்றுக் கொடுத்தார். அவருக்கு, முன்னோக்கிச் செல்லும் பயணத்தின் சிலிர்ப்பைத் தவிர வேறு எதுவும் முக்கியமானதாகத் தெரியவில்லை. இந்த வார்த்தைகள் ஒரு இயக்குநரிடமிருந்து அவரது நடிகரைப் பற்றி மட்டுமல்ல, அவரது தீவிர ரசிகர்களுக்காக மட்டுமல்ல, சினிமா மீதான அவரது அசைக்க முடியாத ஆர்வத்தையும் படைப்பாற்றலின் எல்லையற்ற உணர்வையும் புரிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் உத்வேகம் தருவதாக இருக்கும். எங்கள் மான்ஸ்டர்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகியவற்றின் கீழ் வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து தயாரிக்கும், டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ், சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். சன்டான்ஸ் திரைப்பட விழாவில் தேசிய விருது மற்றும் குளோபல் ஃபிலிம்மேக்கிங் விருது உட்படப் பல பாராட்டுக்களைப் பெற்ற கீது மோகன்தாஸ், இம்முறை மிகப்பெரிய பொழுதுபோக்கு திரைப்படத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
மேலும் படிக்க | அடையாளமே தெரியாமல் மாறிப்போன அஜித்!! எலும்பும் தோலுமா ஆயிட்டாரே..வைரல் போட்டோஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ