Pongal Special Program Latest Updates: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி மக்களின் உணர்வுகளுடன் கலந்த ஒன்றாக விளங்கி வருகிறது. மக்கள் எதிர்பார்க்கும் வகையில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட சீரியல்கள், முற்றிலும் மாறுபட்ட தரமான ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக தொடர்ந்து மக்களை கவர்ந்து வருகிறது.
அதே போல் பண்டிகை தினங்களில் மக்களை மகிழ்விப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அப்படி தான் இந்த பொங்கலை கொண்டாட்டங்கள் நிறைந்த ஒன்றாக மாற்ற உள்ளது ஜீ தமிழ். வரும் ஜனவரி 12-ம் தேதி முதலே ஜீ தமிழ் பொங்கலை வரவேற்க தயாராகி விட்டது.
அதன்படி எந்தெந்த தினத்தில் எந்தெந்த நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
வரும் ஜனவரி 12-ம் தேதி மாலை 6:30 மணிக்கு தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி 2024-ன் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக வெற்றி பெற்ற Greatest Of All Time ( GOAT ) திரைப்படம் உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது. தளபதி விஜயின் டபுள் ஆக்சன் திரைப்படமான கோட் ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக தை பொங்கல் தினமான ஜனவரி 12-ம் தேதி காலை 9 மணிக்கு கலைமாமணி சொல்வேந்தர் சுகி சிவம் தலைமையில் மோகன சுந்தரம், சாந்தா மணி, பர்வீன் சுல்தானா என பலர் பங்குபெற மக்களுக்கு அதிக மகிழ்ச்சி தருவது நகர உணவா? கிராமத்து உணவா? என்ற தலைப்பில் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது.
தொடர்ச்சியாக காலை 10.30 மணிக்கு இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால், ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆக்சன் திரைப்படமான ரத்னம் ஒளிபரப்பாக உள்ளது.
அதன் பிறகு மதியம் 1:30 மணிக்கு ஜீ தமிழ் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் குழுவினருடன் பொங்கல் சிறப்பு சரிகமப போட்டி ஒளிபரப்பாக உள்ளது. மக்களை மகிழ்விக்கும் மிகப்பெரிய இசை விருந்தாக இந்த நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
அடுத்து மதியம் 3:30 மணிக்கு ஜெயம் ரவி நடிப்பில் எம். ராஜேஷ் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற பிரதர் திரைப்படம் மீண்டும் உங்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. அக்கா தம்பி பாசத்தை கொண்டாடும் இந்த திரைப்படம் உங்களையும் உணர்வுபூர்வமாக உருவ வைக்க உள்ளது.
பிரதர் திரைப்படத்தை தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு தளபதி விஜயின் கோட் திரைப்படம் மீண்டும் உங்களை கொண்டாட வைக்க உள்ளது. ஆமாம் பொங்கலுக்கு முன்னரே ஒளிபரப்பான கோட் திரைப்படம் மீண்டும் ஜனவரி 14-ம் தேதியும் ஒளிபரப்பாக உள்ளது.
கோட் படத்துடன் தை பொங்கல் நிறைவு பெற, மாட்டு பொங்கலான ஜனவரி 15-ம் தேதி காலை 9 மணிக்கு கலைமாமணி சொல்வேந்தர் சுகி சிவம் தலைமையில் உறவுகள் வருகை இன்பமா? துன்பமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது.
அதைதொடர்ந்து காலை 10:30 மணிக்கு கொரடலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம் சரண், சோனு சூட், பூஜா ஹெக்டே என பலர் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்ற ஆச்சார்யா திரைப்படம் உங்களை மகிழ்விக்க வருகிறது.
அடுத்ததாக மதியம் 1:30 மணிக்கு ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் தமிழா தமிழா பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. சென்னை, கோயம்பத்தூர், தஞ்சாவூர், மதுரை என தமிழகத்தின் முக்கியமான 6 மாவட்டங்களை சேர்ந்த பிரபலங்களும் மக்களும் இந்த சிறப்பு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். அன்று முதல் இன்று வரை மண்வாசனை மாறாமல் இருப்பது எங்க ஊர் தான் என 6 மாவட்டத்தை சேர்ந்த மக்களும் விவாதம் செய்ய உள்ளனர்.
மாட்டுபொங்கலின் நிறைவு பகுதியாக மதியம் 3:30 மணிக்கு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர், அர்ச்சனா என பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திகில் திரில்லர் திரைப்படமான டிமான்டி காலனி 2 ஒளிபரப்பாக உள்ளது.
எனவே ஜனவரி 12-முதல் 15 வரை சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்களுடன் இந்த பொங்கலை கொண்டாட தயாராகுங்கள். கோட் படத்தை பார்த்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து பரிசுகளையும் வெல்லுங்கள்.
மேலும் படிக்க - விஜய் படத்தில் நடித்து மன அழுத்தம்தான் மிச்சம்! மீனாட்சி சௌத்ரி பகீர் பேச்சு..
மேலும் படிக்க - வேட்டி-சட்டையில் க்யூட்டாக கலக்கும் அமலா பாலின் மகன்! வைரலாகும் புகைப்படங்கள்..
மேலும் படிக்க - Video: நடிகர் அஜித்தின் ரேஸ் கார் விபத்து... பதற வைக்கும் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ