போகி பண்டிகையில் இந்த 4 ராசிக்காரர்கள் வாழ்க்கை பொற்காலமாய் மாறப்போகிறது!

இந்த வருடத்தில் வருகின்ற போகி 30 ஆண்டுகளுக்குப் பிறகு பௌர்ணமி முன்னிட்டு வருகிறது. இது தற்செயலான ஒரு அரிய சிறப்பான நிகழ்வு என்றே சொல்லலாம். இதில் வருகின்ற போகி அன்று சூரியன் மகர ராசிக்கு செல்கிறார். 

 

தனுசு ராசியில் இருக்கும் சூரிய பகவான் அந்த ராசி விட்டு மகர ராசியில் நுழைய செல்கிறார். இதனால் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகிக்கு பிறகு நீங்கள் திருமணம் இல்லறம் போன்ற சுப காரியங்களை மீண்டும் தொடங்கலாம். இந்த பௌர்ணமிக்கு மறுநாள் வரும் போகி  30 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஒரு அரிய நிகழ்வு எனக் கூறப்படுகிறது.

1 /8

இந்த முறை போகி பௌர்ணமிக்கு மறுநாள் வருவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் எனச் சொல்லப்படுகிறது. சனி மற்றும் சூரியன் அருளால் பலனடையும் முக்கிய ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.

2 /8

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த போகி பண்டிகையினால் உங்கள் வாழ்க்கைக்கு அதிர்ஷ்ட கதவு காத்திருக்கிறது. இதனால் மிதுன ராசிக்காரர்கள் மதரீதியான செயல்களில் அதிகம் ஆர்வம் காட்ட தொடங்குவார்கள். மேலும் இவர்களுக்கு நிதி ஆதாயத்தின் மூலம் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

3 /8

துலாம் ராசிக்காரர்களுக்குச் சனி தாக்கத்தால் இவர்களுக்கு நல்ல எதிர்காலம் ஒலிக்கச் செய்கிறது. இந்த ராசிக்காரர்களுக்கு ஏதேனும் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.  தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். வாழ்க்கையில் பெரிய பெரிய வெற்றியைக் காண்பீர்கள்.

4 /8

மகர ராசிக்காரர்கள் சனியின் தாக்கத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நல்ல ஒளிமயமான எதிர்காலம் அமையப் போகிறது. இவர்கள் ஏதேனும் வியாபாரம் அல்லது தொழில் தொடங்கினால் நல்ல லாபம் காண்பார்கள். மேலும் இவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி பெறும் அரிய வாய்ப்புத் தேடி வரும்.

5 /8

கும்ப ராசிக்காரர்களுக்குச் சனியின் தாக்கத்தால் உங்களிடம் இருக்கும் தொழில் பிரச்சனைகள் நீங்கும். தொழிலில் நல்ல ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் லாபகரமான வெற்றித் தேடி வரும். சனி சூரியன் அருளால் உங்களுக்கு நல்ல பொற்காலம் அமையப் போகிறது.   

6 /8

வருமானம், குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை உள்ளிட்டவற்றில் மகிழ்ச்சியான வாழ்க்கை இந்த கும்பம் ராசிக்காரர்களுக்குச் செழிப்பாக அமையவிருக்கும். 

7 /8

அதே நேரத்தில் போகி அன்று சனி தன்னுடைய மூலத்திரிகோணத்தில் அதாவது கும்பத்தில் இருக்கும். இது கும்ப ராசியில் இருக்கும்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு போகி வருகிறது. 

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.