கூடுதல் ஓய்வூதியம், கம்யூட்டேஷன் மீட்பு விதிகளில் மாற்றம்: 65 வயதிலேயே இனி ஓய்வூதிய உயர்வா?

Central Government Pensioners: ஓய்வூதியதாரர்களின் கம்யூடட் ஓய்வூதியத் தொகையை எடுப்பதற்கான கால அளவை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைப்பதற்கான ஒரு பரீசலனையை மத்திய அரசு பெற்றுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 7, 2025, 12:05 PM IST
  • கம்யுடேஷன் மீட்பு காலத்தில் மாற்றம்.
  • ஓய்வூதிய உயர்வு வயதில் மாற்றம்.
  • முக்கிய சில அப்டேட்கள் இதோ.
கூடுதல் ஓய்வூதியம், கம்யூட்டேஷன் மீட்பு விதிகளில் மாற்றம்: 65 வயதிலேயே இனி ஓய்வூதிய உயர்வா? title=

Central Government Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஓய்வூதியதாரர்களின் கம்யூடட் ஓய்வூதியத் தொகையை எடுப்பதற்கான கால அளவை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைப்பதற்கான ஒரு பரீசலனையை மத்திய அரசு பெற்றுள்ளது. மேலும் கூடுதல் ஓய்வூதியத்திற்கான வயது வரம்பை மாற்றவும் பரிசீலனை உள்ளது. இவை அமலுக்கு வந்தால், அது ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

Confederation of Central Government Employees and Workers

பல்வேறு மத்தியத் துறைகளைச் சேர்ந்த சுமார் 7 லட்சம் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பு கடந்த வாரம்  மத்திய அமைச்சரவைச் செயலர் டி.வி.சோமநாதனுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளது. இதில், 38 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம் மாற்றுதல்) விதிகள், 1981 இன் விதி 10A ஐ திருத்தி உருவாக்கப்பட்ட ஓய்வூதியக் குறைப்பு விதிகளை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு செயலாளர் எஸ்.பி.யாதவ் தனது கடிதத்தில், 1986 ஆம் ஆண்டின் முந்தைய அளவுருக்களுடன் ஒப்பிடுகையில், தற்போதைய அளவுருக்கள் குறிப்பாக, வட்டி விகிதம், ஆயுட்காலம், இறப்பு விகிதம், உண்மையான மதிப்புகள் மற்றும் ஆபத்து காரணி ஆகியவை கடுமையான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார். 

Commutation Recovery: கம்யுடேஷன் மீட்பு காலத்தில் மாற்றம்

கம்யூடட் ஓய்வூதியத்தை மீட்டெடுப்பதற்கான காலக்கெடுவை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைக்க 5வது ஊதியக் குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல் இன்னும் பல்வேறு நிபுணர் அமைப்புகளின் பரிந்துரைகளிலும் இது இடம் பெற்றிருப்பதை கடிதம் குறிப்பிட்டுள்ளது.

"ஓய்வூதிய மாற்றம் அதாவது கம்யூடேஷன் என்பது விருப்பத்தின் அடிப்படையில் செய்யப்படலாம் என இருந்தாலும், அரசாங்கம் ஒரு 'மாடல் எம்ப்ளாயராக' அதாவது 'மாதிரி தொழில் வழங்குநராக' இருப்பதால், இதை ஒரு பணியாளர் நலன் சார்ந்த அம்சமாக கருத வேண்டும் என்றும், இதை லாபம் ஈட்டும் நடவடிக்கையாக கருதக்கூடாது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

30 ஆண்டுகளுக்கும் மேலாக தேச பணிகளுக்காக சேவையாற்றிய தனது ஊழியர்களுக்கான, குறிப்பாக ஓய்வூதியதாரர்களுக்கான அரசாங்கத்தின் கொள்கையானது அவர்கள் மீது அனுதாபம் கொண்டதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் அளித்துள்ள மாநிலங்கள்

சில மாநில அரசுகள் நிபுணர் அமைப்புகளின் பரிந்துரைகளைப் பின்பற்றி 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஊழியர்களின் மாற்றியமைக்கப்பட்ட ஓய்வூதியத்தை மீட்டெடுக்க வசதியை அளிக்கின்றன. கேரளா 12 வருட மறுசீரமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. சமீபத்தில் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பிறகு, குஜராத் மாநில அரசு 13 வருட மறுசீரமைப்பை வெளியிட்டுள்ளது.

Additional Pension For Pensioners: 80 வயதில் கூடுதல் ஓய்வூதியத்தியம் வழங்கப்படுதல்

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியத்திற்கான வயது வரம்பை குறைக்கும் ஒரு முக்கிய பரிந்திரையும் உள்ளது. ஓய்வூதியம் பெறுவோர் 80, 85, 90, 95 அல்லது 100 வயதை எட்டும்போது, ​​அடிப்படை ஓய்வூதியத்தில் முறையே 20%, 30%, 40%, 50% மற்றும் 100% கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த வசதி பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் சிவில் அரசு ஊழியர்களுக்கு சமமாக பொருந்தும். எனினும், இந்த வயது வரம்பு குறித்தும் விவாதம் நடந்து வருகின்றது. 

Pension Hike: ஓய்வூதிய உயர்வு

தற்போதைய விதியின்படி, 80 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் 20% உயர்த்தப்படுகிறது. இது சரியான அளவு அல்ல. 65 வயது முதல் 75 வயது வரை அதிக பணம் தேவைப்படுகிறது. ஆனால் அதை விடுத்து 80 வயதிற்குப் பிறகு ஓய்வூதியத்தை அதிகரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்பது பரவலான கருத்தாக உள்ளது. நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைக்குப் பிறகு, 65 வயதிலிருந்து ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் 5% ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தாலும், இது குறித்து இன்னும் தெளிவான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த பரிந்துரையின்படி, 65 வயதில் 5%, 70 வயதில் 10%, 75 வயதில் 15%, 80 வயதில் 20% என்ற வகையில் ஓய்வூதியத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது. விரைவில் இந்த பரிந்துரை அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் படிக்க | அதிகரிக்கிறதா குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்? வலுக்கும் தொழிற்சங்கங்களின் கோரிக்கை, பட்ஜெட்டில் குட் நியூஸ்

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் காத்திருக்கும் பரிசு: 3 விதத்தில் எகிறப்போகும் ஊதியம், ஓய்வூதியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News