இந்த மாதம் நடந்து முடிந்த நிகழ்ச்சி, பிக்பாஸ் 7. எப்போதும் போல இல்லாமல், இந்த சீசனில் அளவுக்கு அதிகமாகவே சர்ச்சைகள் இந்நிகழ்ச்சியை தொடர்ந்தன. இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களாக இருந்த தினேஷ் மற்றும் விசித்ரா, ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 7:
சர்ச்சைகளையும், பிக்பாஸ் நிகழ்ச்சியையும் பிரித்தே வைக்க முடியாது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தமிழில் நடைப்பெற்று வரும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்ப சீசனில் இருந்து, சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த சீசன் வரை அந்த இல்லத்தில் நடைப்பெற்ற பல விஷயங்கள் பஞ்சாயத்தாக சென்று முடிந்துள்ளன. அப்படி, இந்த சீசனிலும் ‘பெண்கள் பாதுகாப்பு, பள்ளிப்படிப்பு குறித்த விவகாரம்’ போன்ற பல நிகழ்வுகள் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தன. இந்த இல்லத்திற்குள் சிலர் டீமாக சேர்ந்து விளையாடினர். சிலர், தனித்தனியாக விளையாடினர். ஆனால் அனைவருக்குள்ளும் பொதுவாக இருந்த ஒரே விஷயம், சண்டை. இந்த நிகழ்ச்சியில் பரம எதிரிகள் போல நடந்து கொண்டவர்கள், விசித்ரா-தினேஷ். இறுதிப்போட்டி வரை தேர்வான தினேஷ், 5 பேரில் 2வது ஆளாக இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். விசித்ரா, இறுதிப்போட்டிக்கு சில வாரங்களுக்கு முன்பு வெளியேறினார்.
ஒரு வழியாக, 106 நாட்களுக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவு பெற்ற நிலையில், இதில் சில போட்டியாளர்களை ஒரு கேம் ஷோவில் பங்கேற்றுக்கொள்ள அழைத்துள்ளனர். அப்போது மீண்டும், பிக்பாஸில் அடித்துக்கொண்ட தினேஷ்-விசித்ராவிற்குள் சலசலப்பு நிகழந்துள்ளது.
மேலும் படிக்க | Amy Jackson: எமி ஜாக்சனுக்கு திருமணம்! மாப்பிள்ளை ‘இந்த’ ஹீரோதான்!
பிக்பாஸிற்கு வெளியிலும் சண்டையா?
பிக்பாஸ் மூலம் பிரபலமான போட்டியாளர்களை வைத்து, அதன் பின்னர் சில நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுண்டு. அப்படி நடத்தப்பட்ட ஒரு கேம் ஷோ, அண்டாகாகசம். இதனை மாகப ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி, வார இறுதியில் ஒளிபரப்பாகும். இந்நிகழ்ச்சியின் இந்த வார ஷூட்டிங், ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைப்பெற்றுள்ளது. இதில் கலந்து கொள்ள பிக்பாஸ் போட்டியாளர்களான தினேஷ், விஷ்ணு, ரவீணா தாஹா, விசித்ரா உள்ளிட்டாேர் வந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை அனைவரும் ஒவ்வொரு டீமில் விளையாட வேண்டும்.
கோபமாக வெளியேறிய விசித்ரா..
ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பு நடிகை விசித்ரா, தினேஷனை தன் டீமில் விளையாட வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு தினேஷ், தன்னால் அவருடன் ஒரே டீமில் விளையாட முடியாது என்று கூறியிருக்கிறார். இதனால் கோபமடைந்த விசித்ரா, உடனே அந்த ஷூட்டிங்கில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறி, ஷூட்டிங்கிள் கலந்து கொள்ளாமல் தனியாக அமர்ந்து கொண்டிருக்கிறார். இதையடுத்து, சில மணி நேரம் கழித்து அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியின் குழுவினர் எவ்வளவோ வந்து கெஞ்சியும், விசித்ரா அங்கிருந்து கிளம்பி விட்டதாக கூறப்படுகிறது.
தினேஷ் மறுத்தற்கான காரணம்..
தினேஷ், விசித்ராவின் டீமில் இருக்க மாட்டேன் என்று கூறியதற்கான காரணத்தையும் நிகழ்ச்சி குழுவினரிடம் தெரிவித்திருக்கிறார். பிக்பாஸில் இருந்த போது தாங்கள் எப்போதுமே சண்டையிட்டு வந்ததாகவும், தன்னை பற்றி அவர் அவதூறான கருத்துகள் கூறியது தனக்கும் தன்னை சேர்ந்தவர்களுக்கும் மனக்கசப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், அவர் தற்போது ஒரே டீமில் விளையாடுமாறு அழைப்பதற்கு பின்னால் ஏதோ காரணம் இருப்பதாக கூறி தினேஷ், அவருடன் விளையாட மறுப்பு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ