தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தண்டேல்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் 'தண்டேல்' திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரகாஷ் பெலவாடி, கருணாகரன், 'ஆடுகளம்' நரேன், பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷாம் தத் சைனூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் சர்வைவல் டிராமா ஜானரிலான இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இதனை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வெளியிடுகிறார்.
மேலும் படிக்க | குடித்து விட்டு ரகளை செய்த ஜெயிலர் பட வில்லன்! வைரல் வீடியோ..
எதிர்வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு , நடிகர் நாக சைதன்யா, நடிகை சாய் பல்லவி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ் - வெங்கட் பிரபு , நடிகர் கருணாகரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நடிகை சாய் பல்லவி பேசுகையில், ''தண்டேல் படத்தின் கதையை கோவிட் காலகட்டத்தின் போது இயக்குநர் சந்து ஒரு உண்மை சம்பவத்தை தழுவி, 20 பக்க அளவிலான கதையாக சொன்னார். அதை இவ்வளவு அழகான காதல் கதையாக மாற்றி வழங்கி இருக்கிறார்கள். இதற்காக மூன்றாண்டு காலம் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஒன்றரை ஆண்டு காலம் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த பயணம் மறக்க முடியாதது. சக நடிகரான நாக சைதன்யா ஒன்றரை ஆண்டு காலத்தை இந்த கதாபாத்திரத்திற்காக வழங்கி, கடுமையாக உழைத்திருக்கிறார். இன்னும் இதற்காக உழைக்க வேண்டும் என்றாலும் அதற்கும் அவர் தயாராக இருக்கிறார். அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத இனிய அனுபவமாக இருந்தது'' என்றார்.
நடிகர் கார்த்தி பேசுகையில்,''இது எனக்கு முக்கியமான மேடை. தெலுங்கு திரையுலகிலிருந்து எனக்கு ஏராளமான அன்பு கிடைத்திருக்கிறது. அந்த அன்பை திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்பாக இதனை கருதுகிறேன். இங்கு வந்த பிறகுதான் நாக சைதன்யா என்னிடம், இந்த கதை 2018 ஆம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவம் என்று சொன்னார். கேட்பதற்கு இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. எவ்வளவு பெரிய திரில்லாக இருந்தாலும் அது டைட்டானிக்காக இருந்தாலும் அதற்குள் ஒரு லவ் ஸ்டோரி தேவைப்படுகிறது. அந்த லவ் தான் மனதில் நிற்கிறது. 20 பேரிடம் ரைட்ஸ் வாங்கி அதை ஒரு அழகான காதல் கதையாக உருவாக்கி வழங்கியிருக்கிறார்கள் என்றால் இந்த கதை மீது தயாரிப்பாளர் எவ்வளவு நம்பிக்கை இருக்க வேண்டும். இந்தப் படத்திற்காக ஒன்றரை ஆண்டு காலம் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாகவே இந்த படத்தை இந்தியா முழுவதும் நம்பிக்கையுடன் வெளியிடுகிறார்கள்.
சாய் பல்லவி மிகவும் ஸ்பெஷல் ஆனவர். அவர் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தன் திறமையை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார். காதலிப்பதாகட்டும்.. அதில் காதலை கொட்டி தீர்ப்பார். இதனாலேயே இளைஞர்கள் எல்லாம் உங்கள் மீது பைத்தியமாக இருக்கிறார்கள். நடனம் சொல்லவே வேண்டாம். வலியை கடத்துவதாக இருந்தாலும் அதிலும் முத்திரை பதிக்கிறீர்கள். வயதிற்கு மீறிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் அனுபவமும் வித்தியாசமாக இருக்கிறது. அமரன் படம் பார்த்துவிட்டு உங்களிடம் பேசியிருக்கிறேன். ஒரு ராணுவ அதிகாரியின் மனைவியின் தியாகம் என்ன? என்று பொதுமக்களுக்கு தெரியாது. அதை அமரன் படத்தில் நீங்கள் விவரித்திருந்த விதம் அவர்களின் வலியை எங்களுக்கு புரிய வைத்தது'' என்றார்.
நடிகர் நாக சைதன்யா பேசுகையில், ''சென்னை எனக்கு எப்போதும் ஸ்பெஷலானது. சென்னை ரசிகர்களின் அன்பிற்காகவும், ஆதரவிற்காகவும் எப்போதும் காத்துக் கொண்டிருப்பேன். ஒவ்வொரு லவ் ஸ்டோரி திரைப்படத்திலும் பாடல்கள் ஹிட்டாக அமைய வேண்டும். இதிலும் ராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் எல்லா பாடல்களையும் ஹிட்டாக்கி இருக்கிறார். இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்த படத்திற்கு பாடல்களுக்கு மட்டும் இசையமைக்காமல் அந்தப் பாடல்களை காட்சிப்படுத்தும் போதும் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து உற்சாகப்படுத்தினார். சாய் பல்லவி அனைவரும் சொல்வது போல் எனக்கும் அவர் ஸ்பெஷலானவர். ஒவ்வொரு நடிகரும், ஒவ்வொரு இயக்குநரும், ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் உங்களைப் பற்றி பேசுவார்கள். அனைவரும் உங்களுடைய ரசிகர்கள் தான். உங்களுடன் பணியாற்றுவது இனிமையான அனுபவம். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
மேலும் படிக்க | பாம்பை கழுத்தில் சுத்திக்கொண்ட பிரபல நடிகர்! வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ