Maha Shivaratri 2025 : மகாசிவராத்திரி அன்று கும்ப ராசியில் அபூர்வ கிரக சேர்க்கை நடைபெறுகிறது. கிரகங்களின் ராஜாவான சூரியன், கிரகங்களின் ராணியான சந்திரன், கிரகங்களின் இளவரசன் புதன் மற்றும் நீதிக்கடவுள் சனி ஆகிய இந்த நான்கு கிரகங்களும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும்.
மகாசிவராத்திரி அன்று உருவாகும் அபூர்வ யோகம் கடகம் மற்றும் கும்பம் உள்ளிட்ட ஐந்து ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இவர்களுக்கு, வேலை, தொழில், வியாபாரம் மற்றும் கல்வியில் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உண்டாகும்.
மகா சிவராத்திரி இந்தாண்டு பிப்ரவரி 26ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு இரு நாட்களுக்கு முன் வரக்கூடிய சதுர்த்தசி திதியில் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
மகாசிவராத்திரி அன்று சூரியன், சந்திரன், சனி ஆகியவை கும்ப ராசியில் இணைவதால் உருவாகும் அபூர்வ சதுர்கிரஹ யோகம், காரணமாக சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள். சனி பெயர்ச்சிக்கு முன்னதாக, ஏற்படும் அற்புத நிகழ்வான இதன் மூலம் சில ராசிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என கணித்துள்ளனர் ஜோதிடர்கள்.
மிதுனம்: மகாசிவராத்திரி அன்று உருவாகும் விசேஷ கிரக சேர்க்கையால் மிதுன ராசிக்காரர்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்வி படிக்கத் திட்டமிடுபவர்கள் வெற்றி பெறுவார்கள். கூட்டுத் தொழிலில் லாபமும், ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
கடகம்: மகாசிவராத்திரி அன்று உருவாகும் சதுர்கிரஹ யோகம் கடக ராசிக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். வருமானம் பெருகும். திருமணம் தொடர்பான தடைகள் நீங்கும். உங்கள் மனைவியுடனான உறவுகள் சுமுகமாக இருக்கும்தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. வேறு சில நிறுவனங்களில் இருந்து சிறந்த வேலை வாய்ப்பைப் பெறலாம்.
சிம்மம்: மகாசிவராத்திரி அன்று உருவாகும் சதுர்கிரஹ யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். புதிதாக திட்டம் அல்லது முயற்சி அல்லது தொழில் தொடங்க விரும்பினால், இதுவே சரியான வாய்ப்பு. வீட்டில் சுப காரியங்கள் நிறைவேறும். கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் குடும்பத்துடன் பயணம் செய்ய திட்டமிடலாம். இது உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
துலாம்: மகாசிவராத்திரி அன்று உருவாகும் சதுர்கிரஹ யோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக நன்மை பயக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். செல்வாக்கு மிக்கவர்களுடனான உறவுகள் பலப்படும். ஆயுதங்கள் அல்லது பாதுகாப்பு தொடர்பான துறையில் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
மகரம்: மகாசிவராத்திரி அன்று உருவாகும் சதுர்கிரஹ யோகம் மகர ராசிக்காரர்களுக்கு, எதிர்பாராத பலன்களைத் தரும். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். கடின உழைப்பிற்கு வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். இருப்பினும், தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, பயணங்களின் போது கவனமாக இருங்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவைப் பேணுவது நன்மை தரும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.