தமிழில் ஒரு பழமொழி உண்டு. காலை அரசன் போல், மதியம் மந்திரி போல், இரவு யாசகன் போல் சாப்பிட வேண்டுமென்பதுதான் அது. இரவு சிறிதளவுதான் சாப்பிட வேண்டுமென்றாலும் அந்த உணவில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் பலர் இரவில் சரியான நேரத்தில் சாப்பிடுவதில்லை. பொதுவாக, இரவு எட்டு மணிக்குள் சாப்பிடுபவர்களின் உடல் நலம் சீரான ஆரோக்கியத்திற்குள் இருப்பதாகவும், செரிமானமும் சீராக நடைபெறுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் நிறைய பேர் இரவு உணவை தாமதமாகத்தான் உட்கொள்கிறார்கள். நள்ளிரவில் எழுந்து பசியை போக்குபவர்களும் இருக்கிறார்கள். ஆரோக்கியமான உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதற்கு கடினமாக இருந்தாலும் சிலவகை உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது.
மாமிசம்:
இரவு நேரத்தில் மாமிச உணவுகளை சாப்பிட்டால் செரிமானம் மெதுவாக நிகழும். உடலின் வளர்சிதை மாற்றத்தையும் அது குறைத்துவிடும். மேலும் உடல் உறுப்புகளின் இயல்பான செயல்பாட்டுக்கு இடையூறை ஏற்படுத்தவும் செய்யும். இரவில் இறைச்சி சாப்பிடுவர்கள் வழக்கத்தை விட குறட்டை சத்தத்தை அதிகமாக வெளிப்படுத்துவார்கள். இதனால் அவருடன் உறங்குபவர்களுக்கும் அது பிரச்னை. எனவே இறைச்சி உணவுகளை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.
ஐஸ்கிரீம்:
ஐஸ்க்ரீம் எப்போதும் குழந்தைகள் முதல் பெரியவர்களைவரை விரும்பப்படும் உணவு. இரவு விருந்துக்கு செல்பவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ஐஸ்கிரீமை விரும்பி ருசிக்கும் வழக்கம் பரவலாக நடைமுறையில் இருக்கிறது. அதில் அதிக அளவு கொழுப்பும், சர்க்கரையும் கலந்திருக்கிறது. இவை இரவு நேரத்தில் உடலுக்கு ஒத்துக்கொள்ளாது. உடல் எடை அதிகரிப்புக்கு வித்திடும்.
மேலும் படிக்க | நீரிழிவை வீட்டிலேயே குணப்படுத்தினால் நல்லது தானே? டயபடீஸ் நோய்க்கு கை வைத்தியம்
சாக்லேட்:
இதில் இருக்கும் காபினும், ஊட்டச்சத்துக்களும் இதயத்திற்கு நலம் சேர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இரவில் சாக்லேட் உட்கொள்வது பதற்றத்தை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுத்துவிடும்.
பாஸ்தா:
பசியுடன் இருக்கும் சமயத்தில் பாஸ்தா சாப்பிடலாம். அப்படி சாப்பிடும்போது அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் உடலுக்கு நன்மை சேர்க்கும். ஆனால் இரவு நேரத்தில் பாஸ்தா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உடலில் கொழுப்பின் அளவை அதிகப்படுத்திவிடும். அதனால் உடல் எடையும் அதிகரிக்கக்கூடும். உடலில் கார்போஹைட்ரேட் அளவை உயர்த்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் படிக்க | BA 5 வகை ஒமிக்ரானின் புதிய அறிகுறிகள்! உங்களுக்கு இப்படி இருந்தா கவனமா இருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ