Navapashanam Statue: பழநி முருகன்-பூம்பாறை வேலப்பர் நவபாஷண சிலைகளின் வித்தியாசம்

பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி முருகன் கோவில் சிலை நவபாஷணத்தால் உருவானது என்பது தெரியும். உலகிலேயே மற்றுமொரு முருகன் சிலை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது தெரியுமா?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 23, 2021, 07:09 AM IST
  • பழநி முருகன்-பூம்பாறை வேலப்பர் நவபாஷண சிலைகளின் வித்தியாசம்
  • இரு சிலைகளுமே சித்தர் போகாரால் செய்யப்பட்டவை
  • இரண்டுமே யானைமுட்டி குகையில் உருவானவை
Navapashanam Statue: பழநி முருகன்-பூம்பாறை வேலப்பர் நவபாஷண சிலைகளின் வித்தியாசம் title=

பழநி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. தண்டாயுதபாணி தனது அருளினால் பக்தர்களை காப்பாற்றுகிறார் என பிரசித்தி பெற்ற ஆலயம் தண்டாயுதபாணி திருக்கோவில். உலகிலேயே முதல்முதலாக கருவறையில் நவபாஷண சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயம் பழனி தண்டாயுதபாணி திருக்கோயில்.

சித்தர் போகரால் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட முருகனுக்கு செய்யப்படும் அபிஷேகத்தின் தீர்த்தத்தை அருந்தினால், தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.

இந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிலும் ஐம்பொன், வெண்கலம் மற்றும் கற்களால் ஆன சிலைகளே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. பழநியைத் தவிர மற்றுமொரு கோவிலில் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலை உள்ளது. இந்த சிலையும் போகரே உருவாக்கினார் என்றாலும், இரு சிலைகளுக்கும் வித்தியாசங்கள் உள்ளன, அவை என்னவென்று தெரிந்துக் கொள்வோம்…

பழனி மலையில் தண்டாயுதபாணி குடி கொண்டுள்ளார். பூம்பாறை மலையில் குழந்தை வேலப்பர் அருள் பாலிக்கிறார்.

Also Read | முன்ஜென்ம பாவங்களைப் போக்கும் முக்தி ஆலயங்கள், உங்களுக்கு அருகிலேயே…

பழனி மலைக்கும், பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையையில் மூலிகை ராசாயனங்களால் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது தண்டாயுதபாணி சிலை. உலகின் முதல் நவபாஷணச் சிலை பழநி முருகனுடையது தான். தண்டம் கொண்டு உருவாக்கப்பட்டதால் தண்டாயுதபாணி என்று பழநி முருகனுக்கு  பெயர் சூட்டினார் போகர்.

அதன்பிறகு  சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மேலும் பல கலைகளை அறிந்த பிறகு தமிழ்நாட்டின் யானை முட்டி குகைக்கு வந்து குருமூப்பு சிலையை உருவாக்கினார். இந்த சிலை பழநி முருகன் சிலைக்கு அடுத்ததாக செய்யப்பட்ட இரண்டாவது நவபாஷாண சிலையாகும். பழநி முருகன் சிலை செய்த பிறகு, இன்னும் பல கலைகளை கற்ற நிலையில் உருவாக்கப்பட்டது பூம்பாறைக் முருகன் சிலை என்பது குழந்தை வேலப்பர் நவபாஷன சிலையின் சிறப்பு.

அந்த சிலைதான் பூம்பாறை மலையில் போகாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்கு அருணகிரிநாதர் வந்து இரவு தங்கியபோது, அவருக்கு இன்னல் ஏற்படாமல், குழந்தை உருவில் வந்த முருகன் காப்பாற்றியதால், பூம்பாறை முருகனை குழந்தை வேலப்பர் என்று அருணகிரிநாதர் பாடினார்.

பழநி முருகனைப் போலவே சக்தி வாய்ந்த பூம்பாறை வேலப்பர் கோவில் தண்டாயுதபாணி கோவில் அளவுக்கு பிரசித்தி பெற்றதில்லை. ஆனால், இந்த முருகன் யாருக்கு தரிசனம் தர நினைக்கிறாரோ அவர்கள் மட்டுமே இந்த ஆலயத்திற்கு செல்ல முடியும் என்பது ஐதீகம். குழந்தை வேலப்பரை தரிசித்தால் முற்பிறவி என்று சொல்லாத நிலை எதிர்காலத்திலும் ஏற்படாவண்ணம் பிறப்பறுத்து அருள்வார் குழந்தை வேலாப்பர்.

Also Read | இன்றைய பஞ்சாங்கம் ஜூன் 23, 2021 ஆனி 9ம் நாள், புதன்கிழமை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News