பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு NABARD வங்கியில் வேலைவாய்ப்பு!

விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியில்(NABARD) காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Sep 12, 2022, 08:43 AM IST
  • NABARD வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • 177 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு.
  • அக்டோபர் 10 வரை விண்ணப்பிக்கலாம்.
பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு NABARD வங்கியில் வேலைவாய்ப்பு! title=

விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியில்(NABARD) காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

1) நிறுவனம் :

 NABARD வங்கி 

2) காலி பணியிடங்கள் :

177

3) பணிகள் :

- டெவலப்மென்ட் அசிஸ்டன்ட் : 173 பணியிடங்கள் 
- டெவலப்மென்ட் அசிஸ்டன்ட் (ஹிந்தி) : 04 பணியிடங்கள் 

மேலும் படிக்க | ரூபாய் தாளில் 786 இருந்தால், நீங்கள்தான் லட்சாதிபதி

4) பணிக்கான தகுதிகள் :

டெவலப்மென்ட் அசிஸ்டன்ட் - அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் 50% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

டெவலப்மென்ட் அசிஸ்டன்ட் (ஹிந்தி) - அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் ஆங்கிலம் அல்லது ஹிந்தி வழியில் இளங்கலை பட்டப்படிப்பில் 50% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இளங்கலை ஆங்கிலம் அல்லது ஹிந்தி பட்டபடிப்பில் 50% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5) பணிக்கான வயது வரம்பு :

டெவலப்மென்ட் அசிஸ்டன்ட் - குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 வயது வரை.  
டெவலப்மென்ட் அசிஸ்டன்ட் (ஹிந்தி) - குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 வயது வரை.  

6) விண்ணப்பிக்கும் செயல்முறை :

NABARD வங்கியின் அதிகாரபூர்வ தளமான www.nabard.org-ல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து கொள்ள வேண்டும்.

7) விண்ணப்பிக்கும் செயல்முறை தொடங்கும் நாள் :

செப்டம்பர் 15, 2022.

8) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :

அக்டோபர் 10, 2022.

மேலும் படிக்க | ஊரக வளர்ச்சி வங்கியில் வேலை வாய்ப்பு - கை நிறைய சம்பளம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News