ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு... இனி இவர்களும் பலன் அடைவார்கள்!

Retirement Age Hike: அரசு ஊழியர்களின் பல்வேறு பிரிவினரின் ஓய்வு வயது அதிகரிக்கப்படும் நிலையில், வங்கிகள் மற்றும் எல்ஐசி ஊழியர்களுக்கும் ஓய்வு வயது நீட்டிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Aug 27, 2023, 01:32 PM IST
  • பொதுத்துறை வங்கிகளின் தலைவர், எம்.டி.,களுக்கு இது பொருந்தும்.
  • அடிமட்ட ஊழியர்களுக்கு இது அமல்படுத்தப்படாது.
  • எல்ஐசி தலைவர் பதவியின் ஓய்வு வயதும் அதிகரிக்கப்படும்.
ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு... இனி இவர்களும் பலன் அடைவார்கள்! title=

Retirement Age Hike: அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வு பெறும் வயது ஆகியவற்றில் மத்திய அரசு அவ்வப்போது பல்வேறு திருத்தங்கள் செய்து வருகிறது. இப்போது மீண்டும் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களின் (Managing Director) ஓய்வு வயதை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  ஆனால் கீழ்மட்ட ஊழியர்கள் இதனால் பயனடைய மாட்டார்கள் எனவும் கூறப்படுகிறது. .

பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் தினேஷ் காராவுக்கு பதவி நீட்டிப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், அதாவது அவரது ஓய்வு பெறும் வயதை அரசாங்கம் அதிகரிக்கலாம் என்றும் சமீபத்தில் தகவல்கள் வெளி வந்துள்ளன. பொதுத்துறை வங்கிகள் (PSB) மற்றும் எல்ஐசி தலைவர்களின் ஓய்வு வயதை அதிகரிக்க அரசு பரிசீலித்து வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, "பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குனர்களின் (MD) ஓய்வு பெறும் வயதை தற்போதைய 60 வயதாக உள்ளது. அதனை 62 ஆக உயர்த்துவது குறித்தும் அரசின் முன்மொழிவு உள்ளது" என்றார். மூத்த வங்கியாளரான எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அந்த பதவியில் பொறுப்பேற்றார். மூன்று ஆண்டுகளாக அந்த பதவியில் அவர் நீடித்து வருகிறார். தற்போது உள்ள விதிகளின்படி, எஸ்பிஐயின் தலைவர் 63 வயது வரை பதவியில் இருக்க முடியும். காராவுக்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 63 வயதாகிறது.

மேலும் படிக்க | எல்பிஜி சிலிண்டரை இப்படி முன்பதிவு செய்தால்... அதிரடி தள்ளுபடி கிடைக்கும்

பொதுத்துறை வங்கிகள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) தலைவர்களின் ஓய்வு வயதை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக இயக்குநர்களின் ஓய்வு வயதை 60 வயதில் இருந்து 62 ஆக உயர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பொதுத்துறை வங்கிகள் மற்றும் எல்ஐசி தலைவர்களின் ஓய்வு வயது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார். எல்ஐசி தலைவரின் தற்போதைய ஓய்வு வயது 62 ஆகும்.

ஆந்திராவில்...

மத்திய அரசு ஊழியர்களில் பலருக்கும் ஓய்வு பெறும் வயது சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களின் சில பிரிவினருக்கு ஓய்வு வயதானது அதிகரித்துள்ளது. ஆசிரியர்களின் ஓய்வு வயதை ஆந்திர பிரதேச அரசு உயர்த்தியது. ஆந்திர அரசு ஓய்வு பெறும் வயதை 3 ஆண்டுகள் உயர்த்தியது. இதற்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஓய்வு பெறும் வயதை 62-இல் இருந்து 65 ஆக உயர்த்துவது குறித்து உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் ஷியாம ராவும் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ஆந்திரப் பிரதேசத்தில் உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இது நடைமுறையில் வரும் என்றும், இதனால் அவர்களுக்கு அதி பலன்கள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ், அரசுப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மற்றும் யுஜிசி ஊதிய விகிதத்தைப் பெறும் ஆசிரியர்களுக்கு மட்டுமே இது அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில்...

இதேபோன்று, உத்தரபிரதேசத்தில் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65 வயதாக உயர்த்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அரசும் இதற்கான முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

உத்தரபிரதேசத்தில் கடுமையான மருத்துவர்கள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மாநிலத்தில் மருத்துவப் பணி ஓய்வு பெறும் வயது 62 வயதாக இருக்கிறது, இது தற்போது 65 ஆக அதிகரிக்கப்பட உள்ளது என கூறப்படுகிறது. அதன்படி ஓய்வு பெறும் வயது மூன்று ஆண்டுகள் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | எல்ஐசி தன் விருத்தி திட்டம்: உத்தரவாதமான வருமானம், சேமிப்புக்கு வரி விலக்கு - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News