Headache Remedy | கோடை காலத்தில் வெப்பம் வாட்டி வதைத்து அதனால் தோல் நோய் பிரச்சனை வரும் என்றால், பனி மற்றும் மழைக்காலத்தில் தலைவலி, காய்ச்சல், சளி உள்ளிட்ட பல உயிருக்கு ஆபத்தான நோய்கள் படையெடுக்கும். இதில் இருந்து எப்போதும் தப்பிக்க வேண்டும் என விரும்பினால் தினமும் ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் தொடர்ச்சியாக பல ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்தவகையில் குளிர் அதிகமாக இருக்கும் பனி காலத்தில் தலைவலி ஏன் வருகிறது, அதனை எப்படி சமாளிக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
குளிர் காலத்தில் உடலில் உள்ள சூடு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறைவான பகல்பொழுது, நீண்ட இரவு என பகலிரவு சமநிலை மாற்றம் அடைகிறது. இதனால், மனிதர்களின் தூக்கம் - விழிப்பு முறையும் மாற்றமடைந்து தலைவலி ஏற்படுகிறது. மண்டையோட்டின் முன்புறம் உள்ள சைனஸ் துவாரங்கள் காற்றினால் நிரப்பப்பட்டு வளிமண்டலத்துடன் சமநிலை பேண உதவுகின்றன. பருவநிலை மாற்றத்தால், குளிர்காலத்தில் வளிமண்டல அழுத்தத்தில் ஏற்படும் மாற்றமும் இந்த சமநிலையை குலைத்து தலைவலி ஏற்பட காரணமாகின்றன.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஆய்வாளர்கள், குளிர் வெப்ப நிலை மற்றும் குறைவான பகல் பொழுதால் வளிமண்டல அழுத்ததில் ஏற்படும் மாற்றம் ஆகியவை மனிதர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர். குளிர்காலத்தில் ஒருசில வழிமுறைகளை பின்பற்றினால் தலைவலி பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
தலைவலி பிரச்சனையில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள்;
*குளிர்காலத்தில் வீட்டில் இருந்து வெளியேறும்போது தலை மற்றும் கழுத்தை மறைக்கக்கூடிய குளிர்கால ஆடைகளை கட்டாயம் அணிந்து செல்லுங்கள்.
*சரியான இரத்த ஓட்டத்திற்கு உங்கள் கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகளை நிதானமாக வைத்திருங்கள். நீங்கள் அசௌகரியமாகவோ, பதற்றமாகவோ உணர்ந்தால், தலையை மசாஜ் செய்து கொள்ளுங்கள். கழுத்தினை மெதுவாக வட்டவடிவில் சுழற்றுங்கள்.
*தூக்கம் மற்றும் விழிப்பு முறையை சரியாக கடைபிடியுங்கள். அதாவது ஒவ்வொரு இரவும் சரியான நேரத்தில் உறங்கி சரியான நேரத்தில் விழித்துக்கொள்ளுங்கள். 8 மணி நேர உறக்கத்தை கடைபிடியுங்கள்.
*உங்கள் அறை போதுமான ஈரப்பதமில்லை என்று நீங்கள் உணர்ந்தால் ஈரப்பதமூட்டியைப் (humidifier) பயன்படுத்தலாம். ரேடியேட்டரைப் பயன்படுத்தி அறையை சூடாக வைத்திருங்கள்.
*ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது நீராவி எடுத்து சைனஸ் பிரச்சனை உருவாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
*முகத்தை தினமும் மசாஜ் செய்ய ஜேட் ரோலர் (jade roller) அல்லது குவா ஷா (gua sha) போன்ற முக மசாஜ் கருவிகளைப் பயன்படுத்தவும். இவை சைனஸ் பிரச்சனை மற்றும் தலைவலி ஏற்படுவதை தடுக்க பயன்படுகிறது.
*நாள்தோறும் மூன்றுவேளைகளிலும் சரியான நேரத்தில் உணவு எடுப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உணவு எடுக்காமல் தவிர்ப்பது தலைவலியை ஏற்படுத்தும்.
*காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகிய ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதுவும், உடல்சூட்டை பராமரிக்கும் உணவுகளாக இருக்க வேண்டும்.
*உடல் வெப்பநிலை மற்றும் இரத்த ஓட்டத்தை பராமரிக்க வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியம். குளிர்காலத்தில் காலைநேரத்தில் விழிப்பது கடினமாக இருந்தாலும், ஆரோக்கியத்தை பேண கட்டாயம் இதனை செய்தாக வேண்டும்.
*உடல் தசைகள் ரிலாக்ஸாக இருக்கும் வகையில் சூடான நீர் அல்லது வழக்கமான நீரில் குளித்துக்கொள்ளுங்கள். தேவைக்கு அதிகமாக உடலில் வெப்பத்தை அதிகரித்தாலும் வேறொரு பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
*உங்கள் உடலை சூடாக வைத்திருக்க சூடான இஞ்சி தேநீர், சூடான மஞ்சள் லட்டு அல்லது சூடான பானங்களை அருந்துங்கள்.
*நீங்கள் குளிர்கால ஒற்றைத் தலைவலி வந்தால் சரியான ஒற்றைத் தலைவலி மருந்துகளுக்கு மருத்துவரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது நல்லது.
மேலும் படிக்க | தொப்பை கொழுப்பு குறைய இந்த மேஜிக் மசாலாவை பாலில் கலந்து குடிங்க!
மேலும் படிக்க | தினம் காலை 30 நிமிட வாக்கிங்.. உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ