நல்ல தூக்கத்திற்கு 10-3-2-1-0 ரூல்!! ரொம்ப சிம்பிள், சும்மா ட்ரை பண்ணுங்க..

Simple 10-3 -2-1-0 Rule For Good Sleep : நம்மில் பலர், இரவில் உறக்கம் வராமல் இருக்கும் பிரச்சனையால் அவதிப்படுகிறோம். அப்படிப்பட்வர்களுக்கான சிம்பிள் டிப்ஸ், இதோ.   

Written by - Yuvashree | Last Updated : Jan 12, 2025, 08:37 PM IST
  • இரவில் நல்ல தூக்கம் பெற டிப்ஸ்!
  • 10-3 -2-1-0 ரூல்ஸை பின்பற்ற வேண்டும்..
  • என்ன செய்யனும் தெரியுமா?
நல்ல தூக்கத்திற்கு 10-3-2-1-0 ரூல்!! ரொம்ப சிம்பிள், சும்மா ட்ரை பண்ணுங்க.. title=

Simple 10-3 -2-1-0 Rule For Good Sleep : நல்ல தூக்கமென்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றாகும். ஒருவருக்கு இரவில் நல்ல உறக்கம் இருந்த மட்டுமே அவர் உடல் அளவிலும் மனதளவிலும் வலுவான ஆளாக இருக்க முடியும். நல்ல தூக்கம் நம் வாழ்வை மேம்படுத்துவதோடு மட்டுமன்றி, தெளிவாக யோசிக்கும் திறனையும் அளிக்கிறது. இது குறித்து பேசும் மருத்துவர்கள் 7-8 மணி நேரம் ஒருவர் தூங்குவது அவசியம் என்கின்றனர். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் பலர் வேலைக்கும் பொழுதுபோக்குக்கும் ஓட்டமாய் ஓடிக்கொண்டிருப்பதால், தூக்கத்திற்கான நேரம் குறைந்துவிட்டது என்று சொல்ல வேண்டும். இதை சமாளிக்கவே இருக்கிறது 10-3-2-1-0 ரூல். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்க்கலாம் வாங்க. 

10 மணி நேரத்திற்கு முன்பு செய்ய வேண்டியது..

நாம் உறங்க செல்வதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பு எந்தவிதமான கசையின் பொருட்களையும் எடுத்துக்கொள்ளக்கூடாது. இது, உடலில் உள்ள தூக்கத்தை வரவிடாமல் செய்யும் தனிமத்தை நீக்கும் முறையாகும். இதனால் நாம் உறங்கும்போது இந்தவித இடையூறும் இன்றி நல்ல உறக்கத்திற்கு செல்லலாம். உறங்க செல்வதற்கு 10 மணி நேரம் முன் இப்படி கஃபன் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால் தூக்கவும் அதிகரித்து காலையில் புத்துணர்ச்சியும் பெருங்குமாம். 

3 மணி நேரத்திற்கு முன்பு..

உறங்க செல்வதற்கு சில மணி நேரத்திற்கு முன் அல்கஹால் கலந்த ஏதேனும் பொருளை உட்கொள்வது தூக்கத்தை கெடுக்கலாம். உடல் நலனையும் அது பாதிக்கும். அதேபோலத்தான் அதிகம் சாப்பிடுவதும். இதனால் செரிமான பிரச்சனையை ஏற்பட்டு தூக்கம் கெட்டுப் போவதுடன், தூக்க நேரமும் கம்மியாகும். எனவே இரவு டின்னரை உறங்க செல்வதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.

2 மணி நேரத்துக்கு முன்..

வேலை தொடர்பான அல்லது உங்களுக்கு மன அழுத்தம் கொடுக்கும் விஷயம் எது இருந்தாலும் அதை உறங்க செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பு நிறுத்தி விட வேண்டும். இது உங்கள் உடலில் உள்ள கார்டிசோல் அளவை குறைத்து உடலுக்கு ஓய்வு கொடுக்கும். இது போன்ற வேலைகளை இரண்டு மணி நேரம் முன்பு நிறுத்துவது மூலமாக நீங்கள் உங்கள் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்கிறீர்கள். இதனால் உங்கள் தூக்கமும் கெடாமல் இருக்கும். 

1 மணி நேரம் முன்பு..

உறங்க செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பு உங்கள் கையில் இருக்கும் அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களையும் உபயோகிப்பதை நிறுத்த வேண்டும். போன், லேப்டாப் என எதையும் பயன்படுத்தக் கூடாது. இதிலிருந்து வரும் ப்ளூ லைட் கதிர்கள் உங்களின் தூக்க நேரத்தை கெடுக்கலாம். இதற்காக நீங்கள் இந்த வழிமுறையை பின்பற்ற வேண்டும். 

கடைசியாக 0 முறை:

இது நீங்கள் தூங்கி எழுந்த பிறகு கடைபிடிக்க வேண்டியது. காலையில் அலாரம் வைத்து எழுந்து கொள்கிறீர்கள் என்றால் அதை ஆப் செய்யாமல் ஒருமுறை அலாரம் அடிக்கும் போது எழுந்து விட வேண்டும். இப்படி நீங்கள் தினமும் ஒரு தூக்க நேரத்தை உருவாக்கிக் கொண்டால் தினமும் இரவு தரமான உறக்கம் வரும் என கேரண்டி கொடுக்கின்றனர் மருத்துவர்கள். 

மேலும் படிக்க | 80/20 Rule: டயட்டில் இருந்தாலும் ருசியாக சாப்பிடலாம்... உடல் எடையை குறைக்கலாம்!

மேலும் படிக்க | படுத்த 10 நிமிடத்திற்குள் தூங்குவது எப்படி? இதோ சூப்பர் டிப்ஸ்..

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News