How To Check EPF Balance: ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் அனைவருக்கும் பெரும்பாலும் இபிஎஃப் கணக்கு (EPF Account) இருக்கும். இதில் அவர்கள் மாதா மாதம் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 12% தொகையை டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை அவர்களது நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. இபிஎஃப் தொகை பணியாளர்களின் பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கான முக்கியமான நிதி பாதுகாப்பாக பார்க்கப்படுகின்றது.
EPF Subscribers: இபிஎஃப் உறுப்பினர்கள் பணத்தை எப்போது எடுக்க முடியும்?
இபிஎஃப் கணக்குகள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. பொதுவாக பணி ஓய்வுக்கு பிறகு இபிஎஃப் தொகையை ஊழியர்கள் எடுக்கிறார்கள். எனினும், சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் ஏற்படும் பண தேவைக்காக இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) தங்கள் தொகையை பணி ஓய்வுக்கு முன்னரே எடுக்கவும் இபிஎஃப்ஓ அனுமதிக்கிறது.
EPF Balance Check: இபிஎஃப் இருப்பை சரி பார்ப்பது எப்படி?
மாதா மாதம் நிறுவனம் சரியாக பிஎஃப் தொகையை உங்கள் கணக்கில் டெபாசிட் செய்கிறதா? வட்டித்தொகை கணக்கில் வருகிறதா? கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது? இபிஎஃப் தொகை (EPF Amount) எவ்வளவு உள்ளது? இந்த விவரங்களை எப்படி தெரிந்துகொள்வது?
சில எளிய வழிகளில் இபிஎஃப் இருப்பை தெரிந்துகொள்ளலாம். ஆன்லைன் மற்றும் ஆஃபலைன் என இரு வழிகளிலும் இதை செய்யலாம்.
How To Check EPF Balance Online?
ஆன்லைன் முறையில், இபிஎஃப் இருப்பை இபிஎஃப்ஓ வலைத்தளம் மூலமாகவும், உமங்க் செயலி மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம். அதற்கான வழிமுறையை இங்கே காணலாம்.
EPF Balance Check through EPFO Portal: இபிஎஃப் வலைத்தளம் மூலம் செக் செய்யும் முறை
- முதலில் EPFO வலைத்தளத்திற்குச் செல்லவும்.
- Our Services பிரிவுக்குச் சென்று, For Employees என்பதைக் கிளிக் செய்யவும்.
- Member Passbook விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் UAN எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
- லாக் இன் செய்த பின்னர், உங்கள் பாஸ்புக்கைப் பார்க்கலாம்.
- அங்கு PF இருப்பு மற்றும் டெபாசிட் செய்யப்பட்ட தொகை பற்றிய தகவல்களை நீங்கள் காண முடியும்.
EPF Balance Check through UMANG App: இபிஎஃப் இருப்பை உமங் செயலி மூலம் செக் செய்யும் முறை
- உங்கள் மொபைல் போனில் உமங் செயலியைப் பதிவிறக்கவும்.
- EPFO விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- Employee-Centric Services -இல் கிளிக் செய்யவும்.
- உங்கள் UAN எண் மற்றும் OTP ஐ உள்ளிடவும்.
- இப்போது திரையில் காணப்படும் 'View Passbook' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- இதன் பிறகு பிஎஃப் கணக்கின் இருப்பு திரையில் தெரியும்.
- டெபாசிட் செய்யப்பட்ட தொகை மற்றும் தேதியையும் இப்போது பார்க்கலாம்.
ஆஃப்லைன் முறையில், மிஸ்டு கால் கொடுத்தும், எஸ்எம்எஸ் அனுப்பியும் இபிஎஃப் இருப்பை தெரிந்துகொள்ளலாம்.
EPF Balance Check through Missed Call: மிஸ்டு கால் மூலம் இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள்.
- சில நொடிகளில் உங்கள் மொபைலுக்கு PF இருப்புத் தகவல் அனுப்பப்படும்.
EPF Balance Check through SMS: எஸ்எம்எஸ் மூலம் இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?
- EPF இருப்பைச் சரிபார்க்க மற்றொரு வசதியான வழி SMS ஆகும்.
- இருப்பு விவரங்களைப் பெற, 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO UAN ENG என்று SMS அனுப்ப வேண்டும்.
- 'ENG' என்பது மொழி விருப்பத்தை குறிக்கிறது (உதாரணமாக, ஆங்கிலம்).
- தமிழில் செய்தியை பெற EPFOHO UAN TAM என அனுப்ப வேண்டும்.
- அதன் பிறகு, உங்கள் EPF கணக்குத் தகவலுடன் SMS ஒன்று உங்களுக்கு அனுப்பப்படும்.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் 2 பரிசு: ஊதியம், ஓய்வூதியத்தில் மெகா ஏற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ