48வது சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது...!

சென்னை: 48வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் YMC மைதானத்தில் 90 அரங்கங்கள் அமைக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் 10 சதவீதம் தள்ளுபடியுடன் மக்களுக்காகச் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்தவகையில் இன்றுடன் புத்தக கண்காட்சி நிறைவடைகிறது. 

சென்னையில் 48வது புத்தகக் கண்காட்சி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவரும் டிசம்பர் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை புத்தகக் கண்காட்சியை துவங்கி வைத்தனர். இதில் நுழைவுக்கட்டணம் ரூ 10 மட்டும் செலுத்தி புத்தகங்களை பார்வையிடலாம். மற்றும் பிடித்த புத்தகங்களை உரிய விலைக்கொடுத்து வாங்கி செல்லாம். 

1 /8

விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வார நாட்களில் மதியம் 2.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த புத்தகக் கண்காட்சி நடைபெற்று வந்தது.

2 /8

நாளை மறு நாள் பொங்கல் பண்டிகையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் பண்டிகையைக் கொண்டாடச் சென்றனர்.  

3 /8

சென்னை புத்தக கண்காட்சியில் பல்வேறு புதிய எழுத்தாளர்களின் புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கடைசி நாளான இன்று வரை புத்தக பிரியர்கள் வந்து பார்வையிட்டு புத்தகம் வாங்கி சென்றனர். 

4 /8

டிசம்பர் 27 தொடங்கி ஜனவரி 12 அன்று முடியும் என்று சொல்லப்பட்டியிருந்தது. அந்தவகையில் இன்றுடன் சென்னை 48வது புத்தக கண்காட்சி சிறப்பாக நிறைவடைகிறது.  

5 /8

சென்னை புத்தக கண்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் மனதிற்கேற்ப புத்தகங்கள் அனைத்தும் பல மொழிகளில் விற்பனை செய்யப்பட்டது.

6 /8

நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கியம், வரலாறு மற்றும் மொழிப்பெயர்ப்பு உள்ளிட்ட விதவிதமான வகையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டது.  

7 /8

இன்றுடன் நிறைவடையும் புத்தக கண்காட்சி மாலை 6 மணியுடன் முடிகிறது. இந்த நிறைவு விழாவில் சென்னை சுப்ரீம் கோர்டு நீதிபதி மகாதேவன் பங்கேற்கிறார்.

8 /8

சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய். எம். சி.ஏ மைதானத்தில் மக்கள் அலைமோதும் கூட்டத்துடன் அமோகமாக கண்காட்சி நல்ல வருகையை பெற்றது.