Amazon Great Republic Day Sale: பிராண்டட் போன்களில் பக்கா தள்ளுபடிகள், அசத்தும் அமேசான்

Amazon Great Republic Day Sale: அமேசான் இந்தியா தனது கிரேட் குடியரசு தின விற்பனையை ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு இந்த சேலில் அணுகல் கிடைக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 11, 2025, 10:36 AM IST
  • அமேசான் இந்தியா கிரேட் குடியரசு தின விற்பனை.
  • ஸ்மார்ட்போன்கள், கைக்கடிகாரங்களில் சிறப்பு சலுகைகள்.
  • ஜனவரி 13 ஆம் தேதி தொடக்கம்.
Amazon Great Republic Day Sale: பிராண்டட் போன்களில் பக்கா தள்ளுபடிகள், அசத்தும் அமேசான் title=

Amazon Great Republic Day Sale: அமேசான் இந்தியா தனது கிரேட் குடியரசு தின விற்பனையை ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு இந்த சேலில் அணுகல் கிடைக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை எத்தனை நாட்களுக்கு நடக்கும் என்பது இன்னும் தெரியவில்லை.

Amazon Sale

இந்த விற்பனவில் பல்வேறு பிரிவுகளில் உள்ள பிரபலமான ஸ்மார்ட்போன்களில் மிகப்பெரிய தள்ளுபடிகளை வழங்கவுள்ளதாக அமேசான் கூறுகிறது. OnePlus Nord 4 போன்ற நடுத்தர வகை போன்கள் முதல், Samsung Galaxy S23 Ultra போன்ற உயர்நிலை போன்கள் வரை, அனைத்திலும் அதிக தள்ளுபடிகள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த சேல் ஆதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அற்புதமான சலுகைகளை எதிர்பார்க்கலாம்.

Best Offers on Smartphones, Watches: ஸ்மார்ட்போன்கள், கைக்கடிகாரங்களில் சிறப்பு சலுகைகள்

இந்த விற்பனை குறித்து அமேசான் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்கள் விற்பனையின் போது அதிக தள்ளுபடிகளைக் கொண்டிருக்கும் என்று அமேசான் கூறியுள்ளது. பல சாதனங்களுக்கான சரியான விலை விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் OnePlus 13, Samsung Galaxy S23 Ultra, Redmi A4, iPhone 15, iQOO Z9s, OnePlus Nord 4, Poco X6 மற்றும் Oppo F27 Pro+ போன்ற சில மாடல்களுக்கு நல்ல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கும் என கூறப்படுகின்றது.

Amazon Great Republic Day Sale: OnePlus 13 மற்றும் 13R

OnePlus 13 ஸ்மார்ட்போன் ரூ.69,999 -க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அமேசான் குடியரசு தின விற்பனையின் போது, ​​தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இதை வாங்கினால், இதில் ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படும்.

மறுபுறம், OnePlus 13R ரூ.42,999 -க்கு விற்கப்படுகிறது. இதில் ரூ.3,000 வங்கி அட்டை தள்ளுபடி கிடைக்கும். இந்த விற்பனையின் போது அமேசான் இந்த சலுகைகளை மேம்படுத்துமா என்பது இன்னும் தெரியவில்லை.

மேலும் படிக்க | Amazon Great Republic Day Sale: ஏகப்பட்ட சலுகைகளுடன் இந்த நாளில் ஆரம்பம், மிஸ் பண்ணிடாதீங்க

Amazon Great Republic Day Sale: iPhone 15

அமேசானின் இந்த விற்பனையில் ரூ.60,000 -க்கு கீழ் ஐபோன் 15 கிடைக்குமா? இந்த சேலில் ஐபோன் 15 ரூ.60,000 -க்கும் குறைவாக கிடைக்கும் என்று அமேசான் டீஸர்கள் தெரிவிக்கின்றன. தற்போது, ​​அமேசான் இந்தியா ஸ்டோரில் இந்த சாதனம் ரூ.60,499 -க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் சலுகை உறுதிசெய்யப்பட்ட பிறகு, நிகழ்வின் போது விலை ரூ.60,000 ஆகக் குறையும்.

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடக்கும் அமேசானின் இந்த கிரேட் ரிபப்ளிக் டே சேலுக்காக வாடிக்கையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த விற்பனையின் போது, ​​அமேசான் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், பிசி -கள் மற்றும் இன்னும் பல பொருட்களுக்கு பல விதமான தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இந்த விற்பனையில், வாடிக்கையாளர்கள் வீட்டு உபயோக பொருட்கள், சமையலறை உபகரணங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் பிற பொருட்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளையும் பெறலாம். 

மேலும் படிக்க | ஜியோ பயனர்களுக்கு ஒரு முக்கிய செய்தி... மிஸ்ட் கால் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள ஜியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News