புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் 60வது நாளாக தொடர்கிறது. அதிலும் குறிப்பாக, பஞ்சாய், ஹரியானா உள்ளிட்ட பல வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுவரை மத்திய அரசுடன் நடைபெர்ற 11 சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில், குடியரசு தினத்தன்று (Republic Day) டெல்லியில் பிரமாண்டமாக டிராக்டர் பேரணி நடத்த விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. அந்த பேரணியில் சுமார் 2 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது.
டிராக்டர் பேரணியில் கலந்துக் கொள்வதற்காக, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் (Farmers) டிராக்டர்களில் டெல்லி நோக்கி வந்துக் கொண்டிருக்கின்றனர். இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி வழங்கிவிட்டதாக கூறும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள், டெல்லிக்குள் 100 கிமீ தூரத்திற்கு டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.
Also Read | Budget 2021: பட்ஜெட் பணிகளின் தொடக்கவிழா Halwa ceremony எதற்காக?
ஆனால், இந்த பேரணி நடைபெறும் சாத்தியங்கள் குழப்பமாகவே இருக்கிறது. பேரணி செல்லும் பாதை தொடர்பாக விவசாய சங்கங்கள் எழுத்துப்பூர்வமாக வழங்கவில்லை என்றும், அதன்பிறகுதான் பேரணி குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட முடியும் என்றும் டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
முன்னதாக, விவசாய சங்கங்களுக்கும் காவல்துறையினருக்கும் நடைபெற்ற பேரணி தொடர்பான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டது. அதன்படி, டெல்லியின் காசிப்பூர், சிங்கு மற்றும் திக்ரி எல்லைப் பகுதிகளில் இருந்து தொடங்கும் என்றும், விரிவான விவரங்கள் பின்னர் இறுதி செய்யப்படும் என்று விவசாயிகல் தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் காவல்துறையினரின் (Police) கருத்தைப் பார்க்கும்போது, பேரணிக்கான அனுமதி வழங்கப்பட்டாலும், செல்லும் பாதை தொடர்பாக இதுவரை எதுவும் அறிவிக்கப்படாததால், இன்னும் ஒரேயொரு நாள் இருக்கும் நிலைய்ல் இரண்டு லட்சம் டிராக்டர்கள் கொண்ட பேரணி நடைபெறும் சாத்தியக்கூறுகள் அருகிவிட்டதாகவேத் தெரிகிறது.
Also Read | 7th Pay Commission: DA Hike, ஊதிய உயர்வு பற்றிய முக்கிய விவரங்கள்!!
விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து, டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை ஜனவரி 26 ஆம் தேதி அகற்றப்படுவது நடக்குமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR