முதல்வர் பதவியில் இருந்து நீங்குங்கள்.. மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்.. கெஜ்ரிவால் நிம்மதி

Delhi High Court, Arvind Kejriwal: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வதில் எந்த சிக்கலும் இல்லை. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 28, 2024, 02:10 PM IST
முதல்வர் பதவியில் இருந்து நீங்குங்கள்.. மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்.. கெஜ்ரிவால் நிம்மதி title=

Chief Minister of Delhi: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவியில் இருந்து நீக்கக் கோரிய பொதுநல மனுவை விசாரிக்க மறுத்த உயர்நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்துள்ளது. சுர்ஜித் சிங் யாதவ் என்ற நபர் உயர்நீதிமன்றத்தில் இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதால், சட்டம் மற்றும் நீதிக்கான நடவடிக்கைகள் தடைபடுவதோடு, டில்லியில் அரசியலமைப்பு அமைப்பு சீர்குலைந்துவிடும் அபாயமும் உள்ளதாக மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவால் பதவியில் நீடிக்க முடியாது எனக் கூறுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த அதிகாரமும் இல்லை. அவர் ஓயாதவியில் நீடிப்பது குறித்து முடிவு செய்வது 'அதிகாரம் தொடர்பான' விவகாரம் என்றும், டெல்லி லெப்டினன்ட் கவர்னர் இந்த விவகாரம் குறித்து பரிசீலித்து பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு எந்தப் பங்கும் இல்லை எனக்கூறி மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பிரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணையின் போது, ​​அரசியலமைப்புச் சட்டத்தில் ஏதேனும் கேள்வி இருந்தால், துணைநிலை ஆளுநர் (எல்ஜி) அதைக் கவனிப்பார், அவர் மட்டுமே அதை குடியரசுத் தலைவரிடம் கொண்டு செல்ல முடியும் என்று கூறினார். ஆம், இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும். ஆனால் நாங்கள் இந்த விவகாரத்தில் முடிவு எடுங்கள் என்று எல்.ஜி.யிடமோ (துணைநிலை ஆளுநர்) அல்லது ஜனாதிபதியிடமோ எப்படி கூற முடியும் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது மத்திய அரசின் வேலை, நாங்கள் எப்படி தலையிடுவது?

மேலும் படிக்க - சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்த முடியாது.. கெஜ்ரிவாலுக்கு ஆளுநர் செக்.. அடுத்து என்ன?

இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என எப்படி நீக்கக் கோரிக்கை முடியும் என்று உயர்நீதிமன்றம் மனுதாரரிடம் கேள்வி எழுப்பியது. இதில் எப்படி நீதி விசாரணை நடத்த முடியும்? மேலும் சட்டத்தில் அப்படி ஏதேனும் விதிமுறை உள்ளதா என்று கேட்ட நீதிமன்றம், அப்படி ஏதாவது இருந்தால், அவர் முதல்வராக நீடிக்க முடியாது என்று கூறலாம். 

இந்த மனுவில் அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், இதில் நீதித்துறை தலையீடு செய்ய வாய்ப்பில்லை என்று நீதிமன்றம் கருதுகிறது. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவால் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வதில் எந்த சிக்கலும் இல்லை.

மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும், சிறையில் இருந்தே ஆட்சியை நடத்துவேன் என்றும் கூறியுள்ளார். டெல்லி முதல்வர் மார்ச் 28 வரை அமலாக்கத் துறை காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

மார்ச் 21 அன்று இரவு சுமார் 2 மணிநேர விசாரணைக்குப் பிறகு அமலாக்கத் துறையால் (Enforcement Directorate) டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் (Excise Policy Case) கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஆம் ஆத்மி கட்யினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை அடுத்து, டெல்லி முதல்வராக அவர் நீடிப்பாரா? இல்லையா? என சந்தேகம் எழுந்த நிலையில், டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் நீடிப்பார் என்றும், சிறையில் இருந்தே ஆட்சியை நடத்துவார் என்றும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

 

மேலும் படிக்க - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சியை நடத்த முடியுமா? சட்டம் சொல்வது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News