லக்னோ: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வரவிருக்கும் உ.பி. சட்டசபை தேர்தலை கருத்தில்கொண்டு மிகப்பெரிய அறிவிப்பை அறிவித்துள்ளார். இதன்மூலம் உ.பி. தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்தமுறை உ.பி. தேர்தலில், 40 சதவீத பெண்களுக்கு சீட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் முக்கிய அறிவிப்பாக கருதப்படுகிறது.
பெண்கள் அரசியலில் சேர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் பெண்களை வலியுறுத்துவதாக பிரியங்கா காந்தி கூறினார். அவர் தேர்தலில் 40 சதவீத இடங்களில் பெண்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம் எனக் கூறினார்.
பெண்கள் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்:
ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் நாங்கள் விண்ணப்பங்கள் கேட்டுள்ளோம். அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை விண்ணபிக்கலாம். தேர்தலில் போட்டியிட விரும்பும் அனைவரும் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு அரசியலில் ஈடுபட வாய்ப்பு கொடுப்போம். அதிகமான அளவில் பெண்கள் முன் வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பெண்கள் ஒன்று சேர வேண்டும் சாதி மதத்தை அல்ல:
அனைத்து முடிவும் எடுக்கும் நிலையில் நான் இருந்தால், "50 சதவீத இடங்கள்" பெண்களுக்கு கொடுத்திருப்பேன். ஆனால் என்னிடம் உ.பி. மாநிலத்தின் பொறுப்பு இருக்கிறேன். அதனால் தற்போது உ.பி. தேர்தலில் பெண்களுக்கான ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளேன். சில அரசியல் கட்சிகள் நினைக்கிறது பெண்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் மற்றும் ஒரு சிலிண்டர் கொடுத்தால் போது அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள். இப்படி நினைப்பதால் அரசியலில் எந்தவித மாற்றம் வராது என மறைமுகமாக ஆளும் கட்சியை சாடினார்.
தகுதி அடிப்படையில் பெண்களுக்கு டிக்கெட் வழங்கப்படும்:
நாம் பெண்கள். போராட்டத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்போம். அனைவரும் நமது சகோதரிகள் என்று நினைக்கிறோம், நாம் ஒன்றாக நின்று ஒன்றாக போராட வேண்டும். ஒருவர் தனது சகோதரி, மகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால் எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறினார். இன்னும் பெண்கள் திறமையானவளாக மாறுவாள். சாதியின் அடிப்படையில் அல்ல, தகுதி அடிப்படையில் பெண்களுக்கு சீட் வழங்குவோம் என்றார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கூறுகையில், எனது அரசியல் என்பது மாற்றத்துக்கான அரசியல் மட்டுமே" ஒரு நம்பிக்கை வரவேண்டும், நம்பிக்கை, சேவை மற்றும் அன்பு கொண்ட ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என ஆசைபடுகிறேன் என்றார். மக்களை நசுக்கி கொல்லும் அரசியல் இல்லை.
லக்கிம்பூர் கேரி சம்பவம் நினைவு கூர்ந்தார்:
காங்கிரஸ் பொதுச் செயலாளர் லக்கிம்பூர் கேரிக்கு செல்லும் போது மிகவும் இருட்டாக இருந்தது. என்னை இரண்டு பெண் காவலர்கள் சீதாபூருக்கு அழைத்துச் சென்றனர். அதிகாலை நான்கு மணி வரை அங்கேயே தங்கியிருந்தார்கள். அங்கிருத்த மூத்த பெண் அதிகாரியின் வயதான தாய் நொய்டாவில் தனியாக வசிக்கிறார். பெண்கள் முன்னேற வேண்டும் என்று அவர் கூறினார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR