டெல்லி (ஆம் ஆத்மி) சட்டசபையின் 20 எம்.எல்.ஏ -க்களை தகுதிநீக்குவதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்!
ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ -க்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என தேர்தல் ஆனையம், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையினை ஒப்புக்கொள்வதாய் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த அறிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, கடந்த ஆண்டு மார்ச் 13-ம் தேதி, 21 ஆம் ஆத்மி எம்எல்ஏ -க்களை சட்டப்பேரவை செயலாளர்களாக நியமித்தனர்.
"ஆதாயம் தரும் 2 பதவிகளில் எம்எல்ஏ -க்கள் இருப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல் என்றும், அதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குடியரசு தலைவரிடம் புகார் அளித்தனர்.
இந்த புகார் கடிதமானது குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து எம்எல்ஏ -க்களிடம் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது.
21 எம்எல்ஏக்களில் ஒருவர் தனது பதவியை ராஜினமா செய்தார், எனவே 20 எம்எல்ஏ -க்கள் மீதான விசாரணை தொடர்ந்தது. பின்னர் இந்த 20 எம்.எல்.ஏ களையும் தகுதி நீக்கம் செய்யலாம் என குடியரசு தலைவருக்கு தேர்தல் ஆனையம் பரிந்துரைத்தது.
President Ram Nath Kovind approves recommendation of disqualification of 20 AAP MLAs by Election Commission of India #OfficeOfProfit pic.twitter.com/SCmTE2mKo4
— ANI (@ANI) January 21, 2018
இந்நிலையில் இன்று, இந்த 20 எம்.எல்.ஏ -க்களை தகுதிநீக்கம் செய்வதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்!