புதுடெல்லி: லண்டனில் அமைந்துள்ள பிரிட்டன் பார்லிமென்ட் வளாகம் அருகே நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து லண்டனில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
லண்டனில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி லண்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் வருத்தமளிக்கிறது என கூறிஉள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள டிவிட்டரில்:-
லண்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலினால் மிகவும் வருத்தம் அடைந்தேன். எங்களுடைய எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனை பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் குடும்பத்துடன் உள்ளது. இந்த கடினமான நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இங்கிலாந்திற்கு இந்தியா துணை நிற்கும், இவ்வாறு பதிவு செய்தார்.
At this difficult moment, India stands with UK in the fight against terrorism. @theresa_may @Number10Gov
— Narendra Modi (@narendramodi) March 23, 2017