நடிகை சமந்தா ரூத் பிரபுவும், நாக சைதன்யாவும் 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பிரபலமான ஜோடியாக இருந்த இவர்கள் 2021ல் பிரிவதாக அறிவித்தனர்.
பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபு சிட்டாடல் வெப் தொடரின் இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் டேட்டிங் செய்து வருவதாக சமீப நாட்களாக வதந்தி பரவி வருகிறது. இந்நிலையில் பிக்கில் லீக் போட்டியில் ராஜ் நிடிமோருவுடன் இருக்கும் புகைப்படங்கள் சமந்தா பதிவிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 1ம் தேதி நடிகை சமந்தா உலக பிக்கில் லீக் போட்டியில் சென்னை சூப்பர் சாம்பியன்ஸ் அணியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். அதில் ராஜ் நிடிமோருவுடன் கைகளை இறுக்கமாக பிடித்து இருக்கும் படத்தை பகிர்ந்து உள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து ரசிகர்கள் சமந்தா ரூத் பிரபு மற்றும் ராஜ் நிதிமோருர் டேட்டிங் செய்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
விரைவில் இருவரும் தங்களது புதிய உறவை பற்றி அறிவிப்பார்கள் என்ற வதந்தியும் பாலிவுட் வட்டாரங்களில் பரவி வருகிறது. இருப்பினும் இது குறித்து சமந்தாவோ அல்லது ராஜோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இயக்குனர் ராஜ் நிடிமோர் மற்றும் இயக்குனர் டிகே இணைந்து தி ஃபேமிலி மேன், ஃபார்ஸி, சிட்டாடல்: ஹனி பன்னி மற்றும் கன்ஸ் & குலாப்ஸ் போன்ற வெப் தொடர்களை இயக்கி உள்ளனர்.
இவற்றில் தி ஃபேமிலி மேன் 2 மற்றும் சிட்டாடல்: ஹனி பன்னி ஆகிய வெப் தொடர்களில் சமந்தா நடித்து இருந்தார். இப்போது ரக்த் பிரம்மாண்ட் தொடரில் மீண்டும் ராஜ் மற்றும் டிகே உடன் இணைந்து பணியாற்றுகிறார் சமந்தார்.
இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே தன்னை மிகவும் கடினமான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஊக்குவிக்கின்றனர். எனது சினிமா வாழ்க்கையில் இந்த படங்கள் முக்கியமானதாக மாறியதாகவும் தெரிவித்துள்ளார்.